உலகம்

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது விழுந்த கிரேன் : 22 பேர் பலி!

  • January 14, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 22 பேர்  உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகோன் ராட்சசிமா மாகாணத்தின் (Nakhon) சீக்கியோ (Sikhio) மாவட்டத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது மீட்பு பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. சீக்கியோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அதிவேக சாலை அமைக்கும் திட்டத்தில் இந்த கிரேன் பயன்படுத்தப்பட்டதாக […]

அரசியல் இலங்கை செய்தி

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்: மன்னிப்பு கோருமாறு அழுத்தம்!

  • January 14, 2026
  • 0 Comments

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்தK.D. Lalkantha , உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசி அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு, “மிகிந்தலை தலைமை விகாராதிபதிமீது தரக்குறைவான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மிகிந்தலை தேரருக்கு இருக்கின்றது. எனினும், குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொள்ள […]

இந்தியா

தொடர்கிறது “ஆபரேஷன் சிந்தூர்”: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.எனவே, பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” இவ்வாறு இந்திய இ ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 15 ஆம் திகதி இராணுவ தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் டெல்லியில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதன்போதே இந்திய இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, […]

உலகம்

ஊழியர் ஒருவரின் குற்றச்சாட்டு : நடுவிரலை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்!

  • January 14, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதாரண தொழிலாளி ஒருவரால் மோசமாக விமர்சிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளது. மிச்சிகனின் (Michigan) டியர்போர்னில் (Dearborn) உள்ள ஃபோர்டு தொழிற்சாலைக்கு( Ford factory) ட்ரம்ப் பயணித்திருந்தார். இந்நிலையில் அங்கு பணியாற்றும் டிஜே சபுலா ( TJ Sabula) என அடையாளம் காணப்பட்ட நபர், எப்ஸ்டீன் கோப்புகளை நிர்வாகம் கையாண்ட விதத்தைக் குறிப்பிட்டு ட்ரம்ப் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவதூறான வார்த்தையை […]

உலகம்

கனடா பிரதமர் சீனாவில் களமிறங்குவதன் பின்னணி என்ன?

  • January 14, 2026
  • 0 Comments

கனடா பிரதமர் மார்க் கார்னியின் Mark Carney சீன விஜயமானது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் தனது கழுகுப் பார்வையை செலுத்தியுள்ளது. சீனாவுடனான உறவை கட்டியெழுப்பும் நோக்கிலும், அமெரிக்காவுக்கு வெளியே சந்தை வாய்ப்பை பெறுவதற்குரிய சாத்தியப்பாடு குறித்து ஆராய்வதற்காகவுமே கனடா பிரதமர் பீஜிங் பறக்கின்றார். கனடா தமது நாட்டின் மாநிலமாக மாற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அத்துடன், வர்த்தகப் போரையும் முடுக்கிவிட்டுள்ளார். எனவே, பொருளாதார ரீதியில் […]

ஐரோப்பா

NHS அறக்கட்டளையின் காலதாமதம் : அநியாயமாக பறிபோன உயிர்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  நோயாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து NHS அறக்கட்டளை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் சுகாதார ஆம்புட்ஸ்மேன் (ombudsman -குறைக்கேள் அதிகாரி) குறித்த நோயாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 2023 இல் இறுதியில் கருப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண் ஒருவர், நீண்ட நேர காத்திருப்பு காரணமாக கீமோதெரபி (chemotherapy) சிகிச்சையை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். இதன்காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது […]

உலகம்

“உடனடியாக வெளியேறுங்கள்” : ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

அமெரிக்க குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள அமெரிக்க மெய்நிகர் தூதரகம் நேற்றைய தினம் குறித்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் இப்போது ஈரானை விட்டு வெளியேற வேண்டும். பாதுகாப்பானதாக இருந்தால், ஈரானில் இருந்து துருக்கியே அல்லது ஆர்மீனியாவுக்கு தரைவழியாக புறப்படுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் வொஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்குமான பதற்ற […]

உலகம்

கடந்த 03 ஆண்டுகளில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு! மனிதர்களே காரணம்!

  • January 14, 2026
  • 0 Comments

கடந்த மூன்று ஆண்டுகளாக புவி வெப்பமடைதல் அதிகாரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு முந்தைய அளவை விட 1.4C வெப்பநிலையை தாண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரித்தானிய வானிலை அலுவலகம், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வளிமண்டல அறிவியல் மையத்தின் தரவுகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு 19 ஆம் நூற்றாண்டின் வெப்பநிலையை விட 1.41 பாகை செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள UEAவின் காலநிலை ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் பேராசிரியர் […]

விளையாட்டு

தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்!

  • January 14, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. எனவே, 2ஆவது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகின்றது. மறுபுறத்தில் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் நியூசிலாந்து அணி களம் காண்கின்றது. […]

ஐரோப்பா

பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு பயணித்துள்ள யெவெட் கூப்பர்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) ஸ்காண்டிநேவிய  (Scandinavia) நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆர்க்டிக் பாதுகாப்பில் பிரித்தானியாவின் கவனத்தை தீவிரப்படுத்தவும், உயர் வடக்கில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மேம்பட்ட நேட்டோ முயற்சிகளை ஆதரிக்கவும் இந்த சுற்றுப்பயணம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பின்லாந்து மற்றும் நோர்வேக்கான தனது விஜயத்தின் போது, ​​ எல்லைக் காவலர்கள் மற்றும் பிரித்தானிய படையினரை சந்தித்த அவர், பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளார். மேற்படி பயணத்திற்கு முன்னதாக […]

error: Content is protected !!