இலங்கை செய்தி

பொலிஸாரை அவமரியாதையாக பேசிய அர்ச்சுனா – நீதவான் பிறப்பித்த உத்தரவு!

  • September 26, 2025
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதுடன், பொலிஸாரை தவறான வார்த்தையால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கினை விசாரணை செய்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அர்ச்சுனாவிடம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர். இதன்போது, காரை […]

பொழுதுபோக்கு

அதற்கு என்னை தூண்டியது அல்லு அர்ஜுன் தான் : தமன்னா

  • September 26, 2025
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வருவபர் தமன்னா . தற்போது சிறப்பு பாடலுக்கு படுகிளாமராக நடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கிய வெப் தொடரில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டு பாலிவுட் சினிமாவையே அதிரவைத்தார். இந்நிலையில், டு யூ வான்ன பார்ட்னர் என்ற வெப் தொடரில் நடித்துள்ள தமன்னா, அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பற்றி பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில், […]

ஐரோப்பா

2030ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் மூடிய எரிபொருள் சுழற்சி அணுசக்தி அமைப்பு திட்டத்தை அறிவித்த புடின்

  • September 26, 2025
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை, ரஷ்யா 2030 ஆம் ஆண்டுக்குள் டாம்ஸ்க் பிராந்தியத்தில் மூடிய எரிபொருள் சுழற்சியுடன் கூடிய உலகின் முதல் அணுசக்தி அமைப்பைத் தொடங்கும் என்றும், இது அணு தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான படியாகக் கருதப்படும் என்றும் கூறினார். ரஷ்யாவின் அணுசக்தித் துறையின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உலக அணு வாரத்தின் ஒரு பகுதியாக மாஸ்கோவில் நடைபெற்ற உலகளாவிய அணு மன்றத்தில் பேசிய புதின், இந்த மேம்பாடு, செலவழிக்கப்பட்ட எரிபொருளின் 95% முழு […]

வட அமெரிக்கா

ஓவல் அலுவலகத்தில் மூடிய அறைக்குள் ஷெரீஃப், அசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப்

  • September 26, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நேற்று சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று தலைநகர் வாஷிங்டன் சென்று அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத் […]

இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறையை ஆய்வு செய்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!

  • September 26, 2025
  • 0 Comments

இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறையானது நீண்டகாலமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதாக சபாநாயகர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனா அதனை ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சமலறையில்  சிறிய பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆறு அடுப்புகள் செயலிழந்துள்ளதாகவும், உறைவிப்பான் அறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும்  “எக்ஸாஸ்ட் ஃபேன்களை மாற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அனைத்து ஜன்னல்களும் உலோக வலைகள் மற்றும் கண்ணாடிகளால் மூடப்பட்டிருப்பதால், […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

  • September 26, 2025
  • 0 Comments

கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மீன்பிடி மற்றும் […]

பொழுதுபோக்கு

மீண்டும் விஜய் டிவி வந்த டிடி

  • September 26, 2025
  • 0 Comments

திறமையான தொகுப்பாளினி  திவ்யதர்ஷினி இப்போதெல்லாம் விஜய் டிவி பக்கம் வருவதில்லை. அது ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம் என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளார். ஆனால் தனியார் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் என பெரிய மேடைகளில் இப்போதெல்லாம் அதிகம் காணப்படுகிறார். இப்போது தொகுப்பாளினி டிடி நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். சமையலும் சிரிப்புமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி Grand Finaleகு தான் இவர் வந்துள்ளார். அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் மிகவும் […]

உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு செய்ய விருப்பமில்லை – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

  • September 26, 2025
  • 0 Comments

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதால், அதில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றார். உலக பிரச்சனைகளை கையாண்டு வரும் அதிபர் டிரம்ப், அழைப்பு விடுக்கப்பட்டால் எந்தவொரு பிரச்சனையிலும் தீர்வு காண தயார் என்றும் அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக […]

ஆசியா

மடகஸ்காரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

  • September 26, 2025
  • 0 Comments

மடகஸ்காரில் தண்ணீர் மற்றும் மின்வெட்டு தொடர்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மடகஸ்காரில் தொடர்ச்சியாக 12 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வணிகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இருப்பினும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்ட பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்கிடையே […]

இலங்கை

கொழும்பில் பேருந்து மீது விழுந்த மரம்

  • September 26, 2025
  • 0 Comments

கொழும்பில் ஓல்காட் மாவத்தையில் இன்று காலை ஒரு பேருந்து மீது மரம் விழுந்தது. ரயில்வே தலைமையகத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வாகனங்கள் ஒரு பாதையில் மட்டுமே செல்கின்றன, மேலும் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

error: Content is protected !!