இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு மருத்துவப் பணிக்குழுவை அனுப்பவுள்ள இந்தியா : அமைச்சகம்

  • March 30, 2025
  • 0 Comments

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா ஒரு மருத்துவப் பணிக்குழுவை அனுப்பும் என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. “சத்ருஜீத் பிரிகேட் மருத்துவப் பதிலளிப்பாளர்களின் 118 பேர் கொண்ட குழு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களுடன் விரைவில் மியான்மருக்குப் புறப்பட உள்ளது. பேரிடர் பாதித்த மண்டலங்களில் மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்க ஏர்போர்ன் ஏஞ்சல்ஸ் பணிக்குழு பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்தியுள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதல் – 9 பேர் பலி – நிறுத்தப்பட்ட உணவு விநியோகம்

  • March 30, 2025
  • 0 Comments

காஸா மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஸா பகுதிக்கான உணவு விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக 10 நாட்களுக்குப் பின்னர் உணவுக்கு தட்டுப்பாடு நிலவக்கூடும் என உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்துள்ள புதிய போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் எதிர் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாகச் […]

ஆசியா

மியன்மார் நில அதிர்வு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

  • March 30, 2025
  • 0 Comments

மியன்மார் நிலஅதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளதாக மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி மலேசியப் பிரதமர் உடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசும் வேளையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 300 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

மொத்தமும் போச்சு… முருகதாஸ் தலையில் இடி.. அதிர்ச்சியில் படக்குழு

  • March 30, 2025
  • 0 Comments

ஆ.ர். முருகதாஸ் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து இயக்கிய படம் தான் சிக்கந்தர். இந்த படம் ரமலான் பண்டிகை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில் இதற்கான பிரமோஷனை படு பயங்கரமாக படக்குழு செய்திருந்தது. கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சிக்கந்தர் படம் முன்பதிவிலேயே கிட்டத்தட்ட 50 கோடி வசூலை பெற்றுவிட்டது. ஆகையால் படம் வெளியான பிறகு வசூல் மழையில் நனையும் என படக்குழு காத்திருந்தது. ஆனால் தலையில் இடியை இறக்கும்படி சம்பவம் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை!

  • March 30, 2025
  • 0 Comments

மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் […]

பொழுதுபோக்கு

மீண்டும் நானியுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை…

  • March 30, 2025
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. 2008ஆம் ஆண்டு Ashta Chamma என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, நானி தசரா படத்தை […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

இந்தியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து – உயிர் தப்பிய பயணிகள்

  • March 30, 2025
  • 0 Comments

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று சென்ற விமானத்தின் டயர் திடீரென வெடித்தமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. எனினும் தெய்வாதீனமாக விமானத்தில் இருந்த அனைத்த பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர். டயரில் […]

இந்தியா

இந்தியாவில் இரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்

  • March 30, 2025
  • 0 Comments

இந்தியாவில் காதலித்த இரு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞன் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர், இரண்டு பெண்களைக் காதலித்து, இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்துள்ளார். காதலிகள் இருவரின் அனுமதியுடன் ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்துள்ளார். எனினும் குடும்பத்தினரும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின் மூவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்வதில் உறுதியாக இருப்பதை அறிந்து சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மணமகன் […]

உலகம்

மியன்மாரை அடுத்து இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

  • March 30, 2025
  • 0 Comments

மியன்மாரை அடுத்து இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, மியான்மாரில் சக்திவாய்ந்த நில அதிர்வினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • March 30, 2025
  • 0 Comments

இலங்கையில் சமீப காலமாக சந்தையில் முட்டை விலை வேகமாகக் குறைந்துள்ளது. அதன்படி, இந்த நாட்களில் ஒரு முட்டையின் சில்லறை விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த சூழ்நிலையால் முட்டை உற்பத்தியாளர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 35 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.    

error: Content is protected !!