இந்தியா

இந்தியாவில் ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் வெடி விபத்து – 8 பேர் உயிரிழப்பு

  • January 24, 2025
  • 0 Comments

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள இந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) காலை நிகழ்ந்த வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.இவ்விபத்தில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பண்டாராவில் அமைந்துள்ள அத்தொழிற்சாலையில் காலை 10 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.அதன் காரணமாக கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததாகவும் உள்ளே 14 பேர் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்பட்டது. அவர்களில் இருவர் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வண்டிகளும் அவசர மருத்துவ […]

வட அமெரிக்கா

கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் தொடர்பு கொள்ள திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தகவல்

  • January 24, 2025
  • 0 Comments

வட கொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வட கொரியா பற்றிப் பேசுகையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை தான் இரண்டு முறை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ட்ரம்ப் வட கொரிய அதிபர் கிம்மை சந்தித்தார். அப்போது கிம்முடனான சந்திப்புகள் […]

இலங்கை

இலங்கை: அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் மஹிந்த

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழக்கறிஞர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனுவை தாக்கல் செய்து, அவரது நீக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரினர். கணிசமான எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை நீக்கியதை எதிர்த்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த நீதிமன்ற உத்தரவைக் கோரியும் இந்த FR மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அரசு செலவினங்களைக் காரணம் காட்டி, முன்னாள் அரச தலைவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைக்க அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்ததை அடுத்து […]

பொழுதுபோக்கு

“எது வேணும்னாலும் நடக்கலாம்” குலை நடுங்க வைக்கும் அஜித்தின் வீடியோ

  • January 24, 2025
  • 0 Comments

“நான் இந்த ரேஸில் பங்கேற்கும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் தான் நான் என்னுடைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்ல வேண்டும்” என அஜித் சொன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் விளம்பர பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் மகிழ்திருமேனி அண்மையில் அளித்த பேட்டியில், “அஜித்குமார் ரேஸுக்கு புறப்படும் 2 வாரங்களுக்கு முன்பு, அவர் கார் ரேஸ் பயிற்சிக்கு சென்று […]

ஐரோப்பா

ரஷ்யா மீது தீவிரமாக ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் – பற்றி எரியும் ஆலைகள்!

  • January 24, 2025
  • 0 Comments

மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 112 மைல் தொலைவில் உள்ள ராட்சத ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மற்றொரு தாக்குதலில் இஸ்கந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான மைக்ரோசிப்களை தயாரிக்கும் ஒரு ஆலையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

இந்தியா

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள், ரயில் சேவைகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்ற காரணத்தினால் விமானங்கள், ரெயில்கள் வருகையில் தாமதமாகின. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு […]

இலங்கை செய்தி

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் பச்சை மிளகாயின் விலை – 1800 ரூபாவிற்கு விற்பனை!

  • January 24, 2025
  • 0 Comments

இலங்கையில் பச்சை மிளகாயின் விலை முன்னெப்போது இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றின் விலை   1780 – 1800 வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தின்படி, பச்சை மிளகாயின் மொத்த விலை கிலோவுக்கு ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உள்ளூர் சந்தைகளில் விலை ரூ. 1,800 ஐ எட்டியுள்ளது. கூர்மையான விலை உயர்வு […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் வீசும் ஈயோ புயல் : மின்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • January 24, 2025
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளது. சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அயர்லாந்தின் கால்வேயில் இன்று காலை 5 மணிக்கு 114 மைல் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வேறு எங்கும் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈயோ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்வெட்டு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  

ஆசியா

சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா!

  • January 24, 2025
  • 0 Comments

சீனா சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. இது வரும் காலத்தில் மின்சார தேவையை இலகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள். இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா […]

பொழுதுபோக்கு

நடிகர் ஜெயசீலனின் உயிரை பறித்த மஞ்சள் காமாலை நோய்..

  • January 24, 2025
  • 0 Comments

பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் அடியாட்கள் கூட்டத்தில் நடித்து பிரபலமான ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலை அறிந்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார். 40 வயதாகும், இவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் […]

error: Content is protected !!