உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை : இம்முறையும் தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் முயற்சி !

  • August 21, 2024
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சமீபத்தில் தனது இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த பயணத்தின் போது, போர் நிறுத்தம் குறித்து பிளிங்கன் கறாராக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்காததால், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு

  • August 21, 2024
  • 0 Comments

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மற்றும் ஜூலை 2024 மாதத்திற்கான மாதாந்த நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிடுகிறது. அதன்படி, 2024 ஜூன் மாதத்தில் 2.4% ஆக பதிவாகிய இந்த நாட்டில் பணவீக்கம் 2024 ஜூலையில் 2.5% ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜூன் 2024 இல் 2.7% ஆக இருந்த […]

செய்தி விளையாட்டு

யூடியூபராக களமிறங்கியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ

  • August 21, 2024
  • 0 Comments

உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார். கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார். ‘யுஆர் கிறிஸ்டியானோ’ என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள

  • August 21, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார். காமினி அத்துகோரளவின் மரணத்திற்குப் பின்னர் அவர் அரசியலில் பிரவேசித்தார். அவர் 2004, 2010, 2015 மற்றும் 2020 […]

பொழுதுபோக்கு

நாளை முதல் கொடி பறக்கும்… தமிழ்நாடு இனி சிறக்கும் – விஜய் அறிக்கை

  • August 21, 2024
  • 0 Comments

தளபதி விஜய் துவங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழக’ கட்சியின் கொடி நாளை வெளியிட உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக தளபதி விஜய், அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். நடிப்பை தொடர்ந்து அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க 324 தொகுதியிலும் சந்திக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது தன்னுடைய கட்சியின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி, தளபதி விஜய் துவங்கியுள்ள […]

ஆஸ்திரேலியா

மீன்களுடன் பாலியல் உறவு.. 58 வயது ஆஸ்திரேலிய பெண்மணி மீது குற்றச்சாட்டு !

  • August 21, 2024
  • 0 Comments

மீனுடன் பாலியல் உறவு வைத்ததாக 2 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. இது தொடர்பான விசாரணையும் கோர்ட்டில் பரபரப்பாக நடந்துள்ளது.மிருகங்களுடனான உறவு கொள்வது என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. இதற்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. விலங்குகளுடன் உறவு வைத்துக்கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி என்கிறார்கள். ஆனால், மிருகத்துடனான புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. பாலியல் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வதற்காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறையாக என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் […]

இலங்கை செய்தி

புலிகளின் தங்கம், பணத்தை தேடிய நபர் கைது

  • August 21, 2024
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 54 வயதுடைய ஓமந்த பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஸ்கேனருடன் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளர். சோதனையின் போது, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை

35 நாடுகளுக்கு இலவச விசா நுழைவை அறிவித்த இலங்கை

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகள் உட்பட 35 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத அணுகலை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். முடிவு, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

உலகம் செய்தி

பாகிஸ்தான் பாராளுமன்றில் கடும் எலித் தொல்லை

  • August 21, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எலிகள் புகுந்து அதன் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலி தொல்லையை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் 1.2 மில்லியன் ரூபா பாரிய தொகையை ஒதுக்கியமையுடன் இந்த செய்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக எலிகள் இப்படித் தொல்லை செய்து வருவதாகவும், அவை சாதாரண எலிகளை விடப் பெரியதாக இருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த எலிகள் பல முக்கிய ஆவணங்களை அழித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]

ஆசியா

பாகிஸ்தானிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பஸ் ஈரானில் விபத்து ; 28 பேர் பலி

  • August 21, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் இருந்து ஷியா யாத்ரீகர்கள் 51 பேரை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் நேற்று இரவு விபத்துக்குள்ளானதாக உள்ளூர் அவசர அதிகாரி முகமது அலி மாலெக்சாதே தெரிவித்தார். இந்த விபத்தில் 28 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர், அவர்களில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அலி தெரிவித்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

error: Content is protected !!