போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி
உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கீவ் நகரில் அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து, போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவிட பகுதியில் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து ரயில் மூலம் இன்று (ஆக.23) காலை தலைநகர் கீவ் சென்றடைந்தார். உக்ரைன் உயரதிகாரிகள், பிரதமர் மோடியை ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றனர். மேலும், அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் […]













