வீட்டில் விழுந்த விண்வெளி சிதைவு: நாசா-விடமிருந்து 100,000 டொலர் பெற முயற்சி
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் வீடு ஒன்றின் கூரையைக் கிழித்து சிறிய விண்வெளி சிதைவுத் துண்டு ஒன்று விழுந்தது. அதனால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அமெரிக்க, வான்வெளி, விண்வெளி அமைப்பு (நாசா) 80,000 டொலர் தொகையைத் தங்களுக்கு இழப்பீடாகத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சட்ட நிறுவனம் ஒன்று வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 21) இத்தகவலை வெளியிட்டது. இந்த விவகாரத்தை நாசா கையாளும் விதம், வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்களுக்கான இழப்பீட்டுக் கோரிக்கைகள் எவ்வாறு கையாளப்படும் என்பதை நிர்ணயிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













