ஆஸ்திரேலியாவில் குளிர்காலத்தை வரவேற்க நிர்வாண குளியல் : 3000 பேர் பங்கேற்பு!
குளிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட்டில் உள்ள டெர்வென்ட் ஆற்றில் 3,000-க்கும் மேற்பட்டோர் நிர்வாண நீச்சலில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு முதன்முதலில் 2013 இல் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சாதனை படைத்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியத்திற்கு பணம் சேகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெர்வென்ட் ஆற்றின் வெளிப்புற நீரின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸாகவும், நதி நீர் வெப்பநிலை சுமார் 11 டிகிரி செல்சியஸாகவும் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)