இலங்கை செய்தி

யாழில் 10 வயது பாடசாலை மாணவி மீது துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது

  • May 28, 2024
  • 0 Comments

யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் […]

இலங்கை செய்தி

யாழில் நடந்த பயங்கரம்! அருட்சகோதரியின் அடி தாங்க முடியாமல் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த மாணவிகள்

  • May 28, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். புது வகையான ஆங்கில […]

ஐரோப்பா

கரப்பான் பூச்சியால் காத்திருக்கும் ஆபத்து : ஸ்பெயின் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • May 28, 2024
  • 0 Comments

இந்த கோடையில் ஸ்பெயினுக்குச் செல்லும் பிரித்தானியர்கள் காலநிலை மாற்றத்தால் மரபணு ரீதியாக கடினப்படுத்தப்பட்ட கரப்பான் பூச்சிகளின் புதிய தொற்றுநோயை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்த கோடையில் பூச்சிகள் பெருமளவில் வெளிவரும் என ஸ்பானிஷ் சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் கரப்பான் பூச்சியின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டால், அவசர நடவடிக்கை எடுக்குமாறு எச்சரித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதாலும், வெப்பமான மாதங்கள் முன்பை விட வருடத்திற்கு மேலும் நீடிப்பதாலும் பூச்சிகளின் எழுச்சி ஏற்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். […]

ஐரோப்பா

சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்! 100 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் தொழிற்கட்சிக்கு ஆதரவு

100 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு ஜூலை 4 தேர்தலுக்கு முன்னர் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர், நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மை மற்றும் தேக்கநிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேடிவ்கள் பொதுவாக பெருவணிகத்தின் கட்சியாக இருந்துள்ளனர், ஆனால் தொழிற்கட்சியின் நிதிக் கொள்கைத் தலைவர் ரேச்சல் ரீவ்ஸ், தனது கட்சி பொருளாதாரத்தை இயக்க நம்பலாம் என்பதைக் காட்டுவதற்காக வணிக உரிமையாளர்களுடன் பல ஆண்டுகளாக தொர்பில் இருந்துள்ளனர். சில்லறை […]

தமிழ்நாடு

கோவை – கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் ராணுவ தளவாட கண்காட்சி… பார்வையாளர்கள் ஆச்சரியம்!

  • May 28, 2024
  • 0 Comments

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கிகள், வெடி குண்டுகள், ராணுவ உடைகள் உட்பட பல்வேறு மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு நவீன கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் இந்த மாதிரி […]

ஐரோப்பா

‘உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடரை நிச்சயம் தவிர்க்கமுடியாது’ – எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன் விஞ்ஞானி

  • May 28, 2024
  • 0 Comments

உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பேரிடரை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். நிகழப்போகும் பேரிடரை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பெரிய அளவில் பேரிடராக மாறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். உடனடியாக […]

ஆசியா

தாய்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்!

  • May 28, 2024
  • 0 Comments

தாய்லாந்து பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாயாவின் சிவப்பு விளக்கு நகரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பயணி, தங்கள் பில்லில் 60 பவுண்ட்ஸ் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த காவலர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காவலர்களிடம் தாக்குவதை நிறுத்துமாறு கோரியுள்ளனர். வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பில் சுற்றுலா பயணி ஒரு தனது இரு […]

இலங்கை

இலங்கையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை

  • May 28, 2024
  • 0 Comments

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 06 வருடங்களாக குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் […]

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 5 ஆண்டுகளுக்கு பின்னர் பரிதாபமாக பறிபோன உயிர்

உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார். திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளின் இலக்குகளில் ஒன்றான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார். அந்த தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்திருந்தார். தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், சுமார் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 2019 ஆம் […]

பொழுதுபோக்கு

ஜெயம் ரவி – நித்யா மேனனின் காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு

  • May 28, 2024
  • 0 Comments

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, […]

error: Content is protected !!