இந்தியா

கர்நாடகா – தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மகள்… குத்திக் கொலை செய்த தாய்!

  • April 30, 2024
  • 0 Comments

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் கண்டித்த தாயை மகள் கத்தியால் குத்திய நிலையில், அந்த கத்தியைப் பறித்து தாய் மகளைக் குத்தினார். இதில், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் உள்ள சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் பத்மஜா(40). இவரது மகள் சாஹிதி(19). இவர் சமீபத்தில் கர்நாடகா மத்யமிகா வித்யா (பியூசி) தேர்வுகளை எழுதினார். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் இலக்கியத்தில் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால், இது குறித்து மகளிடம் […]

இலங்கை

4 மாதத்தில் 2,064 இலங்கையர்கள் கொரியாவிற்கு பயணம்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

4 மாத காலப்பகுதிக்குள் 2,064 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு காரணமாக கொரியாவுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, உற்பத்தித் தொழில்களுக்காக 1,708 பேரும்,மீன்பிடித் தொழில்களுக்காக 351 பேரும், கட்டுமான தொழில்களுக்காக 5 பேரும் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர். அவர்களில், 1,892 பேர் முதன்முதலாக வேலைவாய்ப்புக்காகத் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் 41 யுவதிகளும் வேலைவாய்ப்புக்காகத் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

5 நிமிஷத்துக்கு 5 கோடி?.. யார் அந்த பிரபல நடிகை தெரியுமா?

  • April 30, 2024
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் திரைப்படம் இரண்டுமே படு தோல்வியை தழுவியது. கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் கதை அம்சத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். விரைவில் சமந்தா நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்பாக இருக்கிறது. இதேவேளை, பல துன்பங்களிலிருந்து […]

உலகம்

புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய எம்.பி.க்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பணிபுரியும் உரிமை வழங்கப்பட வேண்டும் மற்றும் பொதுச் சேவைகளுக்கு அதிக அணுகல் வழங்கப்பட வேண்டும் என்று எம்.பி.க்கள் இங்கிலாந்தின் குடியேற்ற அமைப்பு குறித்த cross-party அறிக்கையில் கூறியுள்ளனர். அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய இராச்சியத்திற்கு வருவதைத் தடுக்கத் தவறிய அதே வேளையில் அவர்களை ஏழ்மை நிலைக்குத் தள்ள “வடிவமைக்கப்பட்டதாக” தோன்றுகிறது என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . இன்று வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில் , […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திடீரென இரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

  • April 30, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் புதிய  விமான நிறுவனம் ஒன்று தனது விமானங்கள் அனைத்தையும் திடீரென இரத்து செய்துள்ளது. Bonza நிறுவனம் நிதிநெருக்கடியால் சிக்கி தவிக்கின்ற நிலையில் மேற்படி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பாதிக்கப்பட்ட எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். ஆஸ்திரேலிய விமானச் சந்தையில் தொடர்ந்து போட்டி நிலவுவதை உறுதிசெய்யும் முன்னோக்கி வழியைத் தீர்மானிக்க முடிந்தவரை விரைவாகச் செயல்படுகிறோம்” என தெரிவித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா முழுவதும் விமானங்கள் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் உச்சத்தை தொடும் வாடகை கட்டணங்கள்!

  • April 30, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் சராசரியாக விளம்பரப்படுத்தப்பட்ட வீடுகளின் வாடகைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தையில் வரும் ஒரு சொத்தின் சராசரி மாத வாடகை £1,291 பவுண்டாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இது முந்தைய ஆண்டை விட 8.5% அதிகமாகும். லண்டனில் சராசரியாக விளம்பரப்படுத்தப்பட்ட வாடகையானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு மாதத்திற்கு £2,633 ஆக உயர்ந்துள்ளதாகவும் சொத்து பற்றிய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பாவிற்கு நுழைய முயன்ற 50பேர் நடுக்கடலில் பலி சோகம்!

மேற்கு ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஆபத்தான அட்லாண்டிக் பாதையில் பயணித்த படகு ஒன்று கேனரி தீவான எல் ஹியர்ரோவிற்கு தெற்கே 60 மைல் தொலைவில் மூழ்கத் தொடங்கியதில் குறைந்தது 50 பேர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒன்பது நாட்களுக்கு முன்பு 60 பேருடன் செனகல் புறப்பட்டதாகக் கூறப்படும் ஆபத்தான அட்லாண்டிக் பாதையில் பயணம் செய்த படகில் இருந்து ஒன்பது பேர் மீட்கப்பட்டனர் ஸ்பெயினின் சால்வமெண்டோ மரிடிமோ மீட்பு சேவைக்கு, அவ்வழியாகச் சென்ற மொத்த கேரியர் எச்சரிக்கை செய்ததையடுத்து, […]

இலங்கை

இலங்கை : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேராயர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • April 30, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். அத்தகைய தீர்வை வழங்கும் […]

ஐரோப்பா

லண்டனில் பயங்கரம்! வாளைக் கொண்டு பொதுமக்களை தாக்கிய நபர்: 13 வயது சிறுவன் பலி

கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட் பகுதியில் இன்று கையில் வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்த நபர், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அந்த நபரை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனைக்குச் சென்றபோது உயிரிழந்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்: மூன்று பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அடங்குவர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல […]

இலங்கை

ஜப்பானிய தொலைக்காட்சி விளம்பரம் ஊடாக இலங்கைக்கு கிடைத்த கெளரவம்! (வீடியோ)

தேயிலை வர்த்தக நாமமான ‘கோகோ டீ’க்கான (Gogo Tea) ஜப்பானிய தொலைக்காட்சி விளம்பரத்தில் இலங்கையின் அழகிய ரயில் பயணம் காட்சியாக இடம்பெற்றுள்ளது. குறித்த விளம்பர காட்சி முதலில் இலங்கை உள்ளூர் ரயில் நிலையத்தில் தொடக்கி பின்னர் இலங்கையின் அழகிய தேயிலைத் தோட்டங்கள், தேயிலை பறிப்பவர்கள் மற்றும் தெமோதராவில் உள்ள அழகிய Nine-Arch bridge பாலம் ஆகியன அழகிய ரயில் பயணம் காட்சியாக இடம்பெற்றுள்ளது. Gogo Tea “Sri Lanka” என்று Kirin TVC யால் பெயரிடப்பட்டுள்ளது, இந்த […]

error: Content is protected !!