செய்தி

ஐரோப்பாவுக்கு புகலிட கோரிக்கையாளர்களை கடத்தும் கும்பல் அதிரடி கைது

  • April 28, 2024
  • 0 Comments

ஐரோப்பாவுக்கு புகலிட கோரிக்கையாளர்களை கடத்தும் எகிப்து, ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 21 பேர், கொண்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த வலையமைப்பு பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து வடக்கு பால்டிக் பாதை வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குடியேறியவர்களை கடத்தியுள்ளது. Operation Task Force Flow II என்று அழைக்கப்படும் இந்த கைது நடவடிக்கைக்கு யூரோபோல் பொலிஸார் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் பின்லாந்து, […]

ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • April 28, 2024
  • 0 Comments

பிரான்ஸில் கொரோனா தொற்றினையடுத்து மீண்டும் ஒரு நோய் தொற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் டெங்கு காய்ச்சல் பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. ஜனவரி மாதம் முதல் இதுவரை கிட்டத்தட்ட 1,700 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வெறுமனே 131 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், 1,679 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பொது சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பல லட்சம் யூரோவுக்கு விற்கப்பட்ட விசாக்கள் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

  • April 28, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பல லட்சம் யூரோவுக்கு விசாக்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி பொலிசார் சமீபத்தில் பத்து பேரை கைது செய்துள்ளனர், அவர்களில் இரண்டு வழக்கறிஞர்கள் எனவும் சர்வதேச மனித கடத்தல் குழுவில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. சுமார் 350 சீன பிரஜைகளை சட்டவிரோதமாக ஜேர்மனிக்கு அழைத்து வந்ததாக இந்த குழு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மன் பொலிஸார் 101 வீடுகளை சோதனைக்கு உட்படுத்தியதாகவும், இதில் 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இக்குழுவில் […]

இலங்கை

வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை

  • April 28, 2024
  • 0 Comments

வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை இந்த தரப்படுத்தல் வௌிக்காட்டுவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து பதிவாகி வருகின்றது. 2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் […]

உலகம்

அமெரிக்காவில் Amazon நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட பெட்டியால் அதிர்ச்சி

  • April 28, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் Amazon நிறுவனத்துக்கு நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பெட்டி ஒன்றில் பூனைக்குட்டி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனைக்குட்டி, யூட்டா மாநிலத்திலிருந்து கலிபோர்னியா வரை சுமார் 1,125 கிலோமீட்டர் பெட்டியில் பயணம் செய்திருக்கிறது யூட்டா மாநிலத்தில் கேரி (Carrie) என்பவரின் வீட்டில் திடீரென கலீனா எனும் பூனைக்குட்டி மாயமாய் மறைந்துள்ளது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கேரி தேடிய நிலையில் அக்கம்பக்கம், வட்டாரம் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. சுவரொட்டி அடித்து வீடு வீடாக ஒட்டினார். சமூக ஊடகங்களில் […]

உலகம் செய்தி

பிரேசிலை உலுக்கிய தீ விபத்து – 10 பேர் பலி – 13 பேர் படுகாயம்

  • April 28, 2024
  • 0 Comments

தெற்கு பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது ஹோட்டலில் சுமார் 30 பேர் இருந்ததாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடற்ற மக்கள் மற்றும் அகதிகள் ஒரு குழு இந்த லாட்ஜை பயன்படுத்தி வருவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகள் […]

செய்தி

ஏலியனை உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

  • April 28, 2024
  • 0 Comments

பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது. சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன. K2-18b கிரகம் […]

விளையாட்டு

டிம் டேவிட் அடித்த சிக்ஸ்! பிடிக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த கதி

  • April 28, 2024
  • 0 Comments

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகரும் இந்தியர்கள் – அயர்லாந்தில் குவியும் விண்ணப்பங்கள்

  • April 28, 2024
  • 0 Comments

கடந்த பத்தாண்டுகளில் அயர்லாந்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது. அயர்லாந்திற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஆலோசகர் அனிதா கெல்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 2013ஆம் ஆண்டு 800 என காணப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்து 2022ஆம் ஆண்டு 7,000-ஐத் தொட்டதாக கெல்லி கூறினார். ஆனால், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டு மாணவர் விண்ணப்பம் மற்றும் ஏற்பு அதிகரிப்பைக் கண்டுள்ளன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை NMIMS இன் […]

ஐரோப்பா செய்தி

உளவு பார்த்த இருவரால் சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மோதல்?

  • April 28, 2024
  • 0 Comments

சீனாவுக்காக உளவு பார்த்ததாக இருவர் மீது பிரித்தானிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் ஒருவர் உட்பட இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் 32 மற்றும் 29 வயதுடைய இருவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறி சீனாவுக்கு பாதகமான தகவல்களை வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், […]

error: Content is protected !!