தமிழ்நாடு

கொடைக்கானல் – திடீரென பற்றி எரிந்த கார்… அதிர்ஷ்டவசமாக தப்பிய அறுவர்!

  • March 29, 2024
  • 0 Comments

கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து உருத்தெரியாமல் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, இன்று புனித வெள்ளி தினத்துக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக […]

இலங்கை

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி: தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு?

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார […]

இந்தியா

முதல் மாதவிடாய் …மன அழுத்தத்தினால் 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!

  • March 29, 2024
  • 0 Comments

மாதவிடாய் குறித்த மன அழுத்தம் காரணமாக மும்பையில் 14 வயது சிறுமி விபரீத முடிவு எடுத்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Makwani பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது முதல் மாதவிடாய் சந்தித்த நிலையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளர். உறவினர்கள் சிறுமியின் விபரீத முடிவு குறித்து அறிந்ததும் விரைவாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் சிறுமி அவளது முதல் மாதவிடாய் உடல் மாற்றத்தின் போது […]

ஐரோப்பா

ஆறு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா சரமாரி தாக்குதல்

ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஆறு உக்ரைன் பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் உக்ரைனுக்கு அதிக வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவை என்று ஷ்மிஹால் கோரியுள்ளார். உக்ரேனிய அரசு நடத்தும் Naftogaz எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும் வெள்ளிக்கிழமை காலை தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ள அனல் மற்றும் நீர் மின் […]

ஆசியா

எகிப்து, கத்தாருக்கு காசா பேச்சுவார்த்தைக்காக தூதுக்குழுவை அனுப்ப நெதன்யாகு ஒப்புதல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எகிப்து மற்றும் கத்தாருக்கு தூதுக்குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்டார், அங்கு காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தையாளர்கள் முயற்சித்து வருகின்றனர் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களான ஷின் பெட் மற்றும் மொசாட்டின் தலைவர்களுடன் அவர் பேசியதாகவும், “வரவிருக்கும் நாட்களில் தோஹா மற்றும் கெய்ரோவிற்கு அவர்களின் சார்பாக பிரதிநிதிகள் குழுக்கள் செல்வதற்கு ஒப்புதல் அளித்ததாகவும்” நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

பிரித்தானிய ராணுவத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இப்போது தாடி வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். பல மாதங்கள் நீடித்த இராணுவத்தின் பணியாளர்களின் தோற்றம் குறித்த இராணுவத்தின் கொள்கையை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த புதிய கொள்கை புதிய ஆட்களை ஈர்க்க உதவும் என்று ராணுவத் தலைவர்கள் நம்புவதாக கருதப்படுகிறது. டென்மார்க், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற பல வெளிநாட்டுப் படைகள் துருப்புக்களை தாடி வளர்க்க அனுமதிக்கின்றன. பணியாளர்கள் சுத்தமாக […]

இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவு யாருக்கு?: விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து

‘வருகின்ற ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது’ என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் […]

இலங்கை

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை -இளைஞன் ஒருவர் கைது

  • March 29, 2024
  • 0 Comments

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் […]

பொழுதுபோக்கு

நம்ம சிவாங்கி பாப்பாவுக்கு கல்யாணமா? என்னம்மா சொல்லுறீங்க?

  • March 29, 2024
  • 0 Comments

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவாங்கி அதில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் போட்டியாளராக கலந்துகொண்டு, வெற்றிவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை, கோமாளியாக இருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்த சீசன்களில் வாய்ப்பளிக்கப்படும். ஆனால் குக்காக கலந்துகொள்பவர்களுக்கு ஒரு சீசன் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் குக் ஆக கலந்துகொண்டதன் காரணமாக இனி சிவாங்கியால் அந்நிகழ்ச்சியில் […]

இலங்கை

மட்டக்களப்பில் விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற திருச்சிலுவை பாதை நிகழ்வு

உலகெங்கும் ஜேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருசிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் இன்றைய தினம் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (29.03.2024) குருக்கள்மடம் […]

error: Content is protected !!