ஆசியா செய்தி

தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பணிகளை நிறுத்திய சீனா

  • March 29, 2024
  • 0 Comments

இந்த வாரம் ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பொறியாளர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் ஓட்டுனர் கொல்லப்பட்டதை அடுத்து, சீன ஒப்பந்ததாரர்கள் பாகிஸ்தானில் இரண்டு பெரிய அணை திட்டங்களின் கட்டுமானத்தை நிறுத்தியுள்ளனர் என்று மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமார் 1,250 சீனப் பிரஜைகள் பணிபுரியும் தளங்களை மீண்டும் திறப்பதற்கு முன், பாகிஸ்தான் அதிகாரிகள் புதிய பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நிறுவனங்கள் கோரியுள்ளன என்று அதிகாரி கூறினார். சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு […]

ஆசியா

ஹெஸ்பொல்லாவின் முக்கிய துணைத் தளபதி பலி : இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

ஹெஸ்புல்லா ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் துணைத் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது ஹெஸ்பொல்லாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் துணைத் தளபதி அலி அபேத் அக்சன் நைம் லெபனானில் உள்ள பசோரியே பகுதியில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அவர் ஈரானிய ஆதரவு போராளிகளின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்றும், இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கும் திட்டமிடுவதற்கும் அவர் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்படுகிறது

விளையாட்டு

IPL Match 10 – கொல்கத்தா அணிக்கு 183 ஓட்டங்கள் இலக்கு

  • March 29, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல துவக்கம் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 21 […]

இலங்கை

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் இன்று பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷ்ரவஸ்திபுர மற்றும் மற்றையவர் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர். எனினும், அவர்கள் உடைகளை மாற்றிக்கொண்டு சிறை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சிறையிலிருந்து தப்பிச் சென்ற இருவரையும் கண்டுபிடிப்பதற்காக அனுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

தளபதி படத்துல “தல” நடிக்கிறாரா?… உண்மை தகவல் வெளிவந்தது

  • March 29, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அது தொடர்பான சில அப்டேட்கள் கிடைத்துள்ளன. வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் தோனி மற்றும் விஜய் சந்திப்பு நடைபெற்றது. அப்போதே இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை. லியோ படப்பிடிப்பின் போது அட்லி […]

விளையாட்டு

சென்னை வந்த தோனி… விமான நிலையத்தை தெறிக்கவிட்ட CSK ரசிகர்கள்!

  • March 29, 2024
  • 0 Comments

விசாகப்பட்டினம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில், தோனியை கண்ட ரசிகர்கள், ’தோனி, தோனி’ என விண்ணதிர முழக்கமிட்டனர். நடப்பு IPL தொடரில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் தற்போது புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளதோடு, புதிய கேப்டனாக ருத்துரஜ் […]

உலகம்

ரஷ்யாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய இந்தியாவிற்கு உக்ரைன் வலியுறுத்தல்

  • March 29, 2024
  • 0 Comments

ரஷ்யா உடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உக்ரைனை ஆதரிக்க வேண்டும் எனவும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா வலியுறுத்தியுள்ளார். இந்தியா பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவை விமர்சிப்பதை இந்தியா தவிர்த்தது. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தபோதும், இந்தியா ராஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை குறைக்காமல் அதிகரித்தது. […]

ஐரோப்பா

வடக்கு அயர்லாந்தின் பிரபல அரசியல்வாதி பதவி விலகல்

வடக்கு அயர்லாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கக் கட்சியின் தலைவர் ஜெஃப்ரி டொனால்ட்சன்,பதவி விலகியுள்ளார். “வரலாற்று இயல்புடைய குற்றச்சாட்டுகள்” அவர் மீது சுமத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர் பதவி விலகியுள்ளார். டொனால்ட்சன் பிரிட்டிஷ் பிராந்தியத்தின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவராவார், மேலும் வடக்கு அயர்லாந்தின் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்,

வட அமெரிக்கா

76 வயதான நடிகர் அர்னால்டுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை… வெளியான புகைப்படம்!

  • March 29, 2024
  • 0 Comments

நடிகர் அர்னால்டுக்கு 76 வயதில் இதயப்பிரச்சினை வந்துள்ளது. இதனால், இவருக்கு பேஸ் மேக்கர் வைத்து சிகிச்சை செய்திருக்கிறார். இதன் பிறகு தான் நலமுடன் இருப்பதாக அர்னால்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970இல் வெளியான ’ஹெர்குலஸ் இன் நியூயார்க்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984இல் வெளியான சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் திரைப்படமான ’தி டெர்மினேட்டர்’ மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!

  • March 29, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் சுகமான வாழ்க்கையை வாழவும், பணம் சம்பாதிக்கவும் மக்கள் பல வேலைகளை நாடுகிறார்கள். என்ஜினீயரிங், மருத்துவம் போன்றவை பல இளைஞர்களின் தேர்வுகளாக உள்ளது. அதே நேரத்தில் சிலர் சற்று வினோதமாக வாழ்க்கை பாதையை தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் அனிகோ ரோஸ் என்ற பெண் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் தீர்வாக கூறப்படுகிறது. இதனால் அனிகோவுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 42 வயதான […]

error: Content is protected !!