அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடனுக்கு எதிராக திருமதி ஒபாமாவை நிறுத்த திட்டம்
அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்குவதற்கு அக்கட்சியில் கணிசமானோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் நேரடியாக மோதுவார்கள். கட்சியின் வேட்பாளர், உட்கட்சியினர் ஆதரவு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னேறி வருகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனே மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். […]













