செய்தி

இலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

  • February 28, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நீர் கட்டண சூத்திரத்தில் உள்ள விடயங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகிறோம்.

இந்தியா இலங்கை

சாந்தன் உயிரிழந்தார்…! இந்திய ஊடகங்கள் பரபரப்பு செய்தி

  • February 28, 2024
  • 0 Comments

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

ஆசியா

ஜப்பானில் குறையும் மக்கள் தொகை – 8-வது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிவு

  • February 28, 2024
  • 0 Comments

ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதாச்சாரம் சரிந்துள்ளதனால் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதாச்சாரம் 5 சதவீதமும், திருமண விகிதம் 6 சதவீதமும் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக தாய்மார்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு விடுப்பு, குழந்தைகள் பராமரிப்புக்காக மாதா மாதம் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை ஜப்பான் அரசு வழங்கிவருகிறது.

ஐரோப்பா

பாரிஸில் வீதியில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – காப்பாற்றிய பொலிஸார்

  • February 28, 2024
  • 0 Comments

பாரிஸில் பெண் ஒருவரிடம் தவறான நடந்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் வீதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. பொலிஸாரின் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, வீதியின் அருகே வைத்து 28 வயதுடைய பெண் ஒருவரை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திக்கொண்டிருப்பதை அவதானித்தனர். அதிகளவு மது உட்கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு, அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அகதிகளுக்காக அமுலாகும் புதிய நடைமுறை!

  • February 28, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி உதவியானது பணமாக வழங்கப்பட்டது. இனி வரும் நாட்களில் அவர்களுக்கு பண அட்டையாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியுடைய பல மாநிலங்களானது அகதிகளுக்கு இதுவரை காலங்களும் வழங்கப்பட்டு வந்த பணத்தை பண அட்டை மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன் மற்றும் மெக்கலம்பேர்க் போன்ற மாநிலங்களும் இந்த விடயத்தில் தனி முடிவை எடுக்கப்பபோவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பயன் மாநிலத்தில் இவ்வாறு அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற […]

செய்தி

இலங்கையில் அதிக வெப்பமான வானிலை – மாணவர்கள் நோய்க்குள்ளாகும் ஆபத்து

  • February 28, 2024
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் நோய்க்குள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது. பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, அதிக உஷ்ணத்துடனான வானிலையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவுறுத்தல் கோவையொன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, மாணவர்களுக்கு தேவையான அளவு குடிநீர் […]

இந்தியா செய்தி

முதல் விண்வெளி பயணத்திற்கான வீரர்களை அறிமுகப்படுத்திய இந்தியா

  • February 27, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள நாட்டின் முதல் விண்வெளி விமானத்தில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்ட நான்கு விமானப்படை விமானிகளை இந்தியா வெளியிட்டுள்ளது. ககன்யான் திட்டம் மூன்று விண்வெளி வீரர்களை 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதைக்கு அனுப்பி மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விமானத்திற்கு தயாராகும் வகையில் பல சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபரில், ஒரு முக்கிய சோதனை ராக்கெட் செயலிழந்தால், பணியாளர்கள் பாதுகாப்பாக தப்பிக்க முடியும் என்பதை […]

இலங்கை செய்தி

இன்றும் விமானங்கள் ரத்து – மன்னிப்பு கோரியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

  • February 27, 2024
  • 0 Comments

இன்று 06 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கான 06 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மதியம் மும்பை மற்றும் அபுதாபிக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், இன்று பிற்பகல் ரியாத், இன்சியான், துபாய் மற்றும் மாலே ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருந்த விமானங்கள் தாமதமாகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட […]

இலங்கை செய்தி

மீண்டும் களத்திற்கு வந்த கோட்டாவின் ஆஸ்தான சோதிடர்

  • February 27, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞானா அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் தலைமறைவாக இருந்தார். எனினும், தற்போது மீண்டும் சோதிடம், சாந்தி கர்மம் போன்றவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில அரசியல்வாதிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தமது எதிர்கால இலக்குகளை அடைவதற்காக ஞானா அக்காவைக் கொண்டு யாகமொன்றை […]

இலங்கை செய்தி

கொழும்பில் ஒரு மணி நேரத்தில் யாசகம் மூலம் 20 ஆயிரம் சம்பாதித்த பெண்

  • February 27, 2024
  • 0 Comments

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதேதெரியந்துள்ளது. குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். அதற்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய இரண்டு பிள்ளைகளும் மீரிகம – […]

error: Content is protected !!