பொழுதுபோக்கு

முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலியை லைக் செய்தார் சமந்தா

  • October 31, 2023
  • 0 Comments

சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்ததை நாக சைதன்யா உறுதி செய்தார். சமந்தாவை பிரிந்த பிறகு பொன்னியின் செல்வன் படம் புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக பல மாதங்களாக பேசப்படுகிறது. நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலிப்பது உறுதி தான் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தன் பர்சனல் குறித்து பேச விரும்பவில்லை நாக சைதன்யா என […]

இலங்கை

சம்பந்தன் பதவி விலகல் தொடர்பில் பதிலளித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன்

  • October 31, 2023
  • 0 Comments

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.”- இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி – பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவது வழமை. அவ்வாறு வெளியிட்ட கேள்வி – பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அதன் முழு விவரம் வருமாறு, சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என ஊடகங்கள் […]

உலகம்

உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • October 31, 2023
  • 0 Comments

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் நீடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நேற்று 89 டொலர்களாகவும், மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84 டொலராகவும் குறைந்துள்ளது.

இலங்கை

மின் கட்டண மீளாய்வு குறித்து அமைச்சரவை வெளியிட்ட அறிவிப்பு!

  • October 31, 2023
  • 0 Comments

மின்சார கட்டண மீளாய்வு காலத்தை 03 மாதங்களாக குறைப்பதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம்  மறுஆய்வு செய்யப்பட்டது. பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு உரிய கால அவகாசம் 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் 03 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண மீளாய்வு மேற்கொள்ளப்படும்.

இலங்கை

அனுராதபுரத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக முறைப்பாடு!

  • October 31, 2023
  • 0 Comments

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். சிறுமி நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் திபுல்வெவ பொலிஸாரால் […]

பொழுதுபோக்கு

“என் படம் LCU-யில் வரக்கூடாது” வில்லாதி வில்லனாக வேட்டையாடப் போகும் ரஜினி..

  • October 31, 2023
  • 0 Comments

லோகேஷ் லியோ படத்திலிருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டார். தான் நினைப்பதை தன்னடக்கமாக அனைத்து பேட்டிகளிலும் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது பேட்டிகள் கொடுப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார். அடுத்த முழு கவனத்தையும் ரஜினி படத்திற்கு கொண்டு சென்று விட்டார். முன் படங்களில் என்னெல்லாம் தவறு செய்தாரோ அதை சரி செய்ய தயாராகிவிட்டார். முக்கியமாக லோகேஷ் ரஜினியை பல படங்களில் வில்லனாக ரசித்திருக்கிறார். அதை மையப்படுத்தி தான் கதை நகர வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி […]

இலங்கை

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்!

  • October 31, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளைய (01.11) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும் என ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். போராட்டம் தொடர்பான விபரங்களை வழங்கிய அவர், இலங்கை மின்சார சபையை 14 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க […]

ஆசியா

நாளை முதல் ஆப்கன் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றும் பாகிஸ்தான்!

  • October 31, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் தாமாக வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிவதால், நாளை முதல் அவர்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்கும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு நாளை தொடங்க இருக்கிறது. ரஷ்யாவில் தொடங்கி அமெரிக்கா வரை, ஆப்கானிஸ்தான் தேசம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆதிக்க நாடுகளால் அலைக்கழிக்கப்பட்டு வந்தது. உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் அங்கிருந்து […]

இலங்கை

பெறுமதி சேர் வரியை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்!

  • October 31, 2023
  • 0 Comments

01.01.2024 முதல் பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றைய (30.10) அமைச்சரவைக்  கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வரி வசூல் இலக்குகளை அடைய முடியவில்லை என மேலும் […]

இலங்கை

யாழ் – நெடுந்தீவில் தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு !

  • October 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார். குறித்த இளைஞனின் வீடு அருகில் உள்ளதால், தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில், நேற்று உணவருந்த இளைஞன் […]