பொழுதுபோக்கு

வேட்டையனின் வசூல் வேட்டை ஆரம்பம்… இறைவனின் நிலை என்ன?

  • September 29, 2023
  • 0 Comments

இறைவனை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த இறைவனை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த நேற்றைய தினம் திரையரங்குகளில் சந்திரமுகி 2, இறைவன் மற்றும் சித்தா படங்கள் வெளியாகி இருந்தது. எப்போதுமே வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நிலையில் நேற்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகிய சட்டை போடு போட்ட சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அகமது இயக்கத்தில் […]

இலங்கை

ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் 30 வருடகால பூர்த்தி – வெகுசிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழா

  • September 29, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு- ஏறாவூர்- ஐயங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பது வருடகால பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட முப்பெரும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார். மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும் அவரது பாரியார் சப்றியா முஸ்தபா ஆகியோரின் நினைவாக இப்பாடசாலையில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா , வகுப்பறைக்கட்டடம் ஆகிய கையளிப்பு , நன்கொடையாளர்கள் […]

இலங்கை

நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம்

  • September 29, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் காரணமாக, தனது பதவியை துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா தனது பதவியை துறந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”நீதிபதி சரவணராஜா கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் […]

இலங்கை

நீதிபதியின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுவதாக குற்றச்சாட்டு!

  • September 29, 2023
  • 0 Comments

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா குருந்தூர் மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த விகாரை வழக்கின் கட்டளைகளை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தனது பொறுப்புக்கள், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவரால் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார், […]

இலங்கை

முஸ்லிம்கள் மத்தியில் செந்தில் தொண்டமானுக்கு வலுபெறும் ஆதரவு!

  • September 29, 2023
  • 0 Comments

சம்மாந்துறை அஹதியா பாடசாலையின் விருது வழங்கும் விழா அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக பங்கேற்றார். சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா நிறுவனம், பரிபாலன சபை மற்றும் மஜ்லிஸ் அஸ்-ஷூராவின் ஏற்பாட்டில், அஹதிய்யா பாடசாலைகளின் இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. 32 அஹதிய்யா பாடசாலைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். […]

உலகம்

X மாற்றங்களை செய்து வரும் மஸ்க் : புதிய விடயத்தையும் சேர்த்துள்ளார்!

  • September 29, 2023
  • 0 Comments

எலோன் மஸ்க் டுவிட்டரின் உரிமைத்தை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.   ட்விட்டர் மறுபெயரிடுதல் மற்றும் நீல நிற சரிபார்ப்பு அடையாளங்களை அகற்றுதல் உட்பட பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. சமீபத்தில் X இல் லைவ் வந்த எலான் மஸ்க் பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்தார். இப்போது, மைக்ரோ பிளாக்கிங் இயங்குதளம் என்ற  புதிய அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இது பயனர்களுக்கு நேரடி வீடியோ ஒளிபரப்புகளை நடத்த உதவுகிறது. எலோன் முன்பு கேமரா […]

அறிந்திருக்க வேண்டியவை

மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜப்பான் ஆய்வாளர்கள்

  • September 29, 2023
  • 0 Comments

ஜப்பான் மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜப்பானின் புஜி , ஒயாமா சிகரங்களை மறைக்கும் பனியிலிருந்து நீர் சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 6 முதல் 14 துகள்கள் வரை இருந்ததாக Environmental Chemistry Letters சஞ்சிகையில் கூறப்பட்டது. மேகங்களில் உள்ள பிளாஸ்டிக் பருவநிலையை எப்படிப் பாதிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது. சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் Ultraviolet Rays எனப்படும் புறஊதாக் கதிர்கள் படும்போது நுண்ணிய பிளாஸ்டிக் சிதைந்து போவதுண்டு. அப்போது […]

உலகம்

தொடரும் கனடா – இந்தியா பிரச்சினை : வெறுப்புணர்வு செயற்பாடுகள் வேண்டாமே!

  • September 29, 2023
  • 0 Comments

இந்திய-அமெரிக்கர்கள் குழு கனடாவில் இந்துக்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் விரோதமான சூழலைக் கண்டித்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரத்தை பயங்கரவாதச் சுதந்திரத்துடன் கலக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்துக்கள்  நாட்டை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தான் அமைப்பு மிரட்டும் வகையில் உள்ள வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த வெறுப்புணர்வு செயற்பாடு இருநாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தூதரவு உறவுகள் சீர்கெடுவதற்கும் இந்த விவகாரம் மூலக்காரணமாய் அமைந்தது. இந்நிலையல்,  “கனேடிய மண்ணில் […]

வாழ்வியல்

ஏசி அறையிலும் வியர்க்கிறதா? நடுத்தர வயது இளைஞர்களுக்கு எச்சரிக்கை

  • September 29, 2023
  • 0 Comments

முப்பது வயதுக்கு மேல் அனைவருக்குமே அதிகப் பணிச்சுமைகள் வந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். நடுத்தர வயதில் இருப்பவர்கள் சொந்தத் தொழில், அலுவலக வேலை என மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பர். இவர்களது கவனம் வேலையிலேயே இருப்பதால் உடல் நலத்தை குளித்து அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில் நமக்கே தெரியாமல் நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இரத்த சர்க்கரை அளவு மாறுபாட்டைச் சொல்லலாம். குடும்பத்துக்காக அதிகமாக ஓடி […]

செய்தி

டெக்சாஸ் எல்லைக்கு விரைந்த மஸ்க் : புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்!

  • September 29, 2023
  • 0 Comments

உலகின் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க் நேற்றைய (28.09) தினம் டெக்சாஸ் எல்லைக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு விஜயம் செய்த அவர்,  உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளைச் சந்தித்து நிலைமையைப் பற்றி கேட்டறிந்துக்கொண்டார். சமீப நாட்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் சரக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வடக்கு மெக்சிகோவிற்குச் சென்று, பின்னர் அமெரிக்க எல்லையைத் தாண்டி டெக்சாஸ், அரிசோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். அத்துடன் சமீபகாலமாக, இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட பல […]