ஐரோப்பா

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிர்ச்சி – மகளை கொன்ற தந்தை மரணம்

  • July 31, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் தந்தை ஒருவர் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த வாரம் ஜெர்மனி நாட்டில் எஸன் நகரத்தில் பாரிய அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது 50 வயதுடைய ஒரு தந்தையானவர் தனது 19 வயதுடைய மகளை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. அதாவது கடன் சுமையால் அவதியுற்ற தந்தையானவர் வீட்டில் இருந்த தனது 19 வயது மகளை கொலை செய்துள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய அம்சத்தை வெளியிட்ட கூகுள்!

  • July 31, 2023
  • 0 Comments

கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் Unknown Tracker Alert என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இனி உங்களுடைய முழு அனுமதியின்றி மறைமுகமாக உங்கள் அருகே ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்த முடியாது. அப்படி உங்களுக்குத் தெரியாமல் யாராவது பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் அம்சம்தான் இந்த Unknown Tracker Alert. ப்ளூடூத் மூலம் இயக்கப்படும் ஆப்ஜெக்ட் டிராகர்கள் தற்போது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொலைந்து போன அல்லது நாம் தவறவிட்ட பொருட்களின் […]

பொழுதுபோக்கு

கூறுகெட்டத்தனமா பேசக்கூடாது… ரஜினியை விளாசிய பிரபல விமர்சகர்

  • July 31, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதற்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெயில் இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், பயில்வான் ரங்கநாதன் ரஜினியின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் எதை பேச வேண்டும், எதற்காக பேச வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் கூறுகெட்டுத்தனமா […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெப்பம் – நிவ்யோர்க் மக்கள் கடுமையாக பாதிப்பு

  • July 31, 2023
  • 0 Comments

அமெரிக்காவை பாதித்துள்ள வெப்பமான காலநிலையால் நிவ்யோர்க் வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 175 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க குடியிருப்பாளர்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிவ்யோர்க் நகரில் தொடர்ந்து பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்படலாம் என தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம், 1850-க்குப் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிற்கு ஆபத்தாக மாறியுள்ள காலநிலை – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆய்வாளர்கள்

  • July 31, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல்வேறு அசாதாரண சுற்றுச்சூழலை எதிர்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் கடல் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது குறித்த மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. வெயில் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரங்களில் அண்டார்க்டிக் கடல் பகுதிகளில் உருகிய பனிப்பாறைகள் மீண்டும் அதன் நிலையை எட்ட வேண்டும். அவ்வாறு பனியாக மாறினால் மட்டுமே வருங்காலங்களில் வெயிலை சமாளித்து வறட்சி நிலையை தவிர்க்க முடியும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து. […]

ஐரோப்பா

ரஷ்யாவில் சூறாவளி – பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்கள் உட்பட 8 பேர்

  • July 31, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் வீசிய சூறாவளியில் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் Mari El பகுதியில் உள்ள தேசியப் பூங்காவில் Volga ஆற்றோரத்தில் அமைக்கப்பட்ட முகாம் மீது மரங்கள் விழுந்ததில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சூறாவளி தாக்கியபோது முகாமில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாகவும் அவர்களில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் முகாமில் மீட்கப்பட்டன. எஞ்சியவர் மருத்துவமனையில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 29 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன. 16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுற்றுப்பயணிகள் வானிலை நிலவரத்தைக் […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் பிரபல கடற்கரைப்குதி தீக்கிரையாகலாம் – வெப்பால் காத்திருக்கும் ஆபத்து

  • July 31, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுவதால் மற்றுமொரு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மிகவும் பிரபல கடற்கரைகளைக் கொண்ட பிரெஞ்சு ரிவியேரா (French Riviera) வட்டாரம் தீக்கிரையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தெற்கில் இருக்கும் அந்த வட்டாரம் இன்று முதல் அதிக ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்படுகின்றது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ பற்றிய அச்சம் தொடர்கிறது. ஐரோப்பாவில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது. கிரீஸ் ஆகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 31, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜெர்மனி நாட்டிலே பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த காலக்கட்டங்களின் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் பயிற்றப்பட் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக சில நடைமுறைகளை அரசு பின்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது பயிற்றப்பட் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக அவுஸ்பிரிட் என்று சொல்லப்படுகின்ற பயிற்சி கற்கைகளை மேற்கொள்கின்றவர்களுக்கு மாதாந்தம் கொடுக்கப்படுகின்ற உதவி தொகையானது அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது இவ்வாறு மாதாந்தம் கொடுக்கப்படுகின்ற தொகையானது இவ்வாண்டு […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் 5 நபர்களால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • July 31, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஐந்து நபர்களால் கூட்டுப் அவர் இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் Champ-de-Mars பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே உள்ள பூங்காவில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் இருந்தபோது, அவரை ஐந்து ஆண்கள் சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் ஐவரும் இணைந்து அப்பெண்ணை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அப்பெண் மீட்கப்பட்டார். தாக்குதலாளிகளில் மூவர் […]

இலங்கை

தனது நோக்கத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில்

  • July 31, 2023
  • 0 Comments

இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். 13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தான் இறுதித் தீர்வு என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழல் […]

error: Content is protected !!