நீண்ட இடைவெளிக்குப்பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா!! சூப்பர் ஜோடி செட்டாகியது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ.பி.கே சினிமாஸ் சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘துருவங்கள் 16’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். […]













