ஜெர்மனியில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அரசாங்கம்
ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்ற தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனிய நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் செலவளிக்கின்ற தொகையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 500 யுரோவால் அத்தொகையானது அதிகரித்துள்ளமை தெரிய வந்திருக்கின்றது.
குறிப்பாக க்ருன்சுள் என்று சொல்லப்படுகின்ற ஆரம்ப பாடசாலையில் படிக்கின்ற மாணவன் ஒருவருக்கு அரசாங்கமானது எண்ணாயிரம் யுரோக்களை செலவிடுகின்றது.
அதேவேளையில் கேஷம்சுள் என்று சொல்லப்படுகின்ற பாடசாலையில் படிக்கின்ற மாணவ மாணவிக்கு தலா அரசாங்கமானது 10900 யுரோவை செலவு செய்வதாகவும் அஸ்ரீதெரிய வந்திருக்கின்றது.
மேலும் ஜிம்நாசியம் என்று சொல்லப்படுகின்ற உயர் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவ மாணவியருக்கு தலா 10200 யுரோக்களை அரசாங்கம் செலவழிப்பதாகவும் தெரிய வந்திருக்கின்றது.
இதேவேளையில் தொழில் பயிற்சியை மேற்கொள்கின்ற பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்கு வருடாந்தம் 6900 யுரோக்களை அரசாங்கம் செலவீடு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.