ஈரான் மண்ணில் அமெரிக்கா வெற்றிப்பெறுவதை சீனா விரும்பாது – பேராசிரியர் கருத்து!
போரை யார் தொடங்கினார்கள் என்பது குறித்தும், இந்த மோதல் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் சீனாவுக்குத் தெளிவான புரிதல் உள்ளது” என்று தெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹசன் அஹ்மதியான் (Hassan Ahmadian) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இந்நிலையில் ட்ரம்பின் விஜயம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் தொடர்பான அதன் நிலைப்பாட்டிற்கு உதவ சீனா தயாராக இல்லை என்றும் கூறினார்.
“சீனா ஈரானின் ஒரு பெரிய ஆதரவாளர், மேலும் ஈரானில் அமெரிக்கா வெற்றி பெறுவதை அது விரும்பவில்லை. அது சீனாவிற்கு ஒரு வியூக ரீதியான ஆட்டம், அதை அமெரிக்காவிடம் விட்டுக்கொடுக்க அது தயாராக இல்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




