அமெரிக்க, பிரிட்டன் உறவை சீர்செய்யுமா மன்னரின் ராஜதந்திர பயணம்?
பிரிட்டன் மன்னர் சார்லஸின் King Charles அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் Buckingham அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த மன்னர், தனது பயணத்தில் சிறிய மாற்றங்களுடன் பங்கேற்க முடிவெடுத்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். மேலும் சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
ஈரான் போர், ட்ரம்பின் வரி விதிப்பு உள்ளிட்ட விடயங்களால் பிரிட்டனும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல ஐரோப்பிய நாடுகளை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துவருகின்றார். நேட்டோ அமைப்பையும் விளாசித்தள்ளிவருகின்றார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மன்னரின் அமெரிக்க பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஏப்ரல் 27 முதல் 30 ஆம் திகதிவரை அவர் அமெரிக்காவில் இருப்பார்.





