ரஷ்யாவின் நட்பு நாடான செர்பியா, ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கியதாக வெளியான செய்திகளை தொடர்ந்து ரஷ்யா அதிகாரப்பூர்வ விளக்கத்தை கோரியுள்ளது.
இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், செர்பிய அரசு ஆயுத தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் துருக்கி மற்றும் ஸ்லோவாக்கியா வழியாக உக்ரைனுக்கு 3500 ஏவுகணைகளை வழங்கியதாக தெரிவித்துள்ளது.
செர்பிய பாதுகாப்பு மந்திரி மிலோஸ் வுசெவிக் இந்த தகவலை மறுத்துள்ளார். இருப்பினும் மூன்றாம் தரப்பின் ஊடகாக வழங்கப்பட்டிருக்கலாம் என அவர் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ரஷ்யா, அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் கோரியுள்ளது.