பொழுதுபோக்கு

“என் மனைவி மாதியே பேசுறீங்க… அவங்களும் யாழ்ப்பாணம் தான்” விஜய் சொன்னாரு..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிக் பாஸ் ஜனனி நடிகர் விஜய்யுடன் காஷ்மீரில் நடித்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவிலும் நடிகை ஜனனி கலந்து கொண்டார். நடிகர் விஜய்யின் ரீல் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் மற்றும் மகளாக நடித்த இயல் உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர்.

கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் பாடல்கள் எல்லாம் இடம் பெற்ற அந்த காபி ஷாப் சண்டைக் காட்சி தான் லியோ படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த சீனில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பே ஜனனிக்கு அடித்துள்ளது. மேலும், ஜனனிக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சிகளும் லியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு ஜனனி அளித்த பேட்டியில் செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க.. கதைக்குதீங்க என்று தான் பேசுவாங்க என இலங்கை தமிழில் நான் பேசியதை பார்த்து கேட்டார்.

மேலும், என் வைஃப்பும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார். செம சைலன்ட்டாக இருப்பார். ரொம்ப அமைதியா பேசுவார்.. அடடா என்னைப் போலவே என்னோட தளபதியும் இருக்காரே என நினைச்சு ரொம்பவே ஜாலியா இருந்துச்சு என பேசியுள்ளார்.

 

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்