அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை
இஸ்லாமாபாத்தில் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என அமெரிக்கா துணை ஜனாதிபதி JD Vance தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுப்பதே தமது பிரதான இலக்காகும் எனத் தெரிவித்த துணை ஜனாதிபதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




