உலகம்

ட்ரம்பால் ஏற்பட்ட பின்னடைவு – உலகை ஆளப்போகும் சீனா!

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கூட்டு இராணுவ நடவடிக்கை  சீனாவிற்கு  பெரும் பலம் சேர்த்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி இடையூறுகள், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, சீனா ஆதிக்கம் செலுத்தும் தொழில்துறைகளை கட்டியெழுப்ப தூண்டுதலாக அமைந்துள்ளது.

தற்போது பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து வரும் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆசியாவை நோக்கியே சென்றுகொண்டிருந்தது.

ஆசிய நாடுகள் எரிசக்தியைச் சேமிக்கவும், குறைந்துவரும் இருப்புகளை வலுப்படுத்தவும் தீவிரமாக முயன்று வருகின்றன.

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஐரோப்பிய சந்தைகளை ஆட்டம் காண வைத்துள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற்றை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் சீனாவிற்கு கைக்கொடுக்கும்.

தற்போது உலகளாவிய ரீதியில் மின்கலன், சூரிய ஆற்றல் மற்றும் மின்சார வாகன ஏற்றுமதியில் சீனா முன்னணியில் உள்ளது. மேலும், அதன் தொழில்துறைகள் புதுப்பிக்கத்தக்க பொருட்களுக்கான தேவையின் அதிகரிப்பை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!