ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற முனைப்பு காட்டும் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணிநேரம் கெடு விதித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நாளை ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு “நல்ல வாய்ப்பு” இருப்பதாகவும், ஈரான் “தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
“அவர்கள் விரைவாக ஒரு ஒப்பந்தம் செய்யாவிட்டால், எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்து நான் பரிசீலித்து வருகிறேன்,” என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே “செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் – இல்லையென்றால், அங்குள்ள அனைத்தையும் நாங்கள் தகர்த்துவிடுவோம்,” என்று இஸ்ரேலின் சேனல் 12 நியூஸிடம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





