பொழுதுபோக்கு

பா.ஜ.க. தமிழக தலைவர்மீது த்ரிஷா பாய்ச்சல்!

பா.ஜ.கவின் BJP தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் Nainar Nagendran வெளியிட்ட கருத்து தொடர்பில் நடிகை த்ரிஷா Actress Trisha கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாக விசேட அறிக்கையொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷாவை இலக்கு வைத்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கருத்து பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையிலேயே த்ரிஷா மேற்படி கருத்து அருவருப்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“ எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில்,

பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.

எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடாமல், தனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார்.

மிக முக்கியமாக, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான நிலைப்பாடு.

மேலும், உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும், சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” – என்றுள்ளது.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!