உலகம்

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் – 15 பேர் காயம்!

அமெரிக்காவின்  புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று  மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லூசியானாவில் (Louisian)  அமைந்துள்ள  லானெக்சாங் (Lanexang ) கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் இருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது சாரதி மது அருந்தியிருந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 57 வயதான டாட் லேண்ட்ரி (Todd Landry) என்ற நபரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது முதல் நிலை கவனக்குறைவாகக் காயப்படுத்துதல், போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்குதல் ஆகிய 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!