பொழுதுபோக்கு

கிசு கிசுக்கப்பட்ட நடிகையையும், மூத்த நடிகரையும் இணைத்துக்கொண்ட லோகேஷ்

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விரைவில் தலைவர் 171 பட பணிகளை துவங்க உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பரவிவருகின்றன.

வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் மட்டும் டீசர் வெளியாகவுள்ள நிலையில் அந்த டீசருக்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

அதேபோல இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சோபனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாயகியாக நடிக்க உள்ளார் என்கின்ற தகவலும் வெளியானது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி பிரபல நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் என்றும், தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சத்யராஜ் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இன்னும் படக்குழு இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!