ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதி நாளை ஆஸ்திரேலியா விஜயம்!

  • February 7, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் ஜனாதிபதி Israeli President Isaac Herzog நாளை ஆஸ்திரேலியாவுக்கு Australia பயணம் மேற்கொள்கின்றார். அவரது பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா வரும் அவர், முக்கிய பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். ஆஸ்திரேலியா பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான இராஜதந்திர […]

இலங்கை செய்தி

இலங்கை -மாலைதீவு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் Masood Imad, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர். குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய […]

இலங்கை விளையாட்டு

T20 உலகக்கிண்ண தொடர்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

  • February 3, 2026
  • 0 Comments

“இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ண தொடரானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் கைகொடுத்துள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்றது. இதன்போது T20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ T20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பெப்ரவரி 7 முதல் மார்ச் […]

இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியில் பாதுகாப்பு உத்தரவாதம்: வடக்கில் முதலிட வருமாறு ஆளுநர் அழைப்பு!

  • January 21, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று (21.01.2026) ஆரம்பமானது. இந்த மாநாட்டை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ (TMC) – இலங்கை ஒழுங்கமைத்திருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு […]

இந்தியா

பங்களாதேசில் தேர்தல் நெருங்கும்வேளை இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இராஜதந்திர உறவு முதல் விளையாட்டுத்துறைவரை அது தற்போது எதிரொலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பங்களாதேசில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தார் மற்றும் நெருக்கமானவர்களை நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அங்குள்ள பாதுகாப்பு சூழல் கருதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தூதரக செயற்பாடுகள் […]

செய்தி

இலங்கை முப்படைகளுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இந்தியா!

  • January 8, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி General Upendra Dwivedi , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Major General Aruna Jayasekara கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது, இலங்கைக்கும் Srilanka, இந்தியாவுக்கும் india இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் புதிய மைல் கல்லை எட்டியது இலங்கை!

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 797 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்திருந்தனர். இதுவே இதுவரை காலமும் சாதனை எண்ணிக்கையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையில் […]

இலங்கை செய்தி

பூஸா சிறைக்குள் நடப்பது என்ன? தரைக்குள் இருந்து 15 தொலைபேசிகள் மீட்பு!

  • December 27, 2025
  • 0 Comments

பாதாள குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா சிறைச்சாலையிலிருந்து இன்றும் (27) 15 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. பூஸா சிறைச்சாலையானது அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாகக் கருதப்படுகின்றது.எனினும், அங்கு தொலைபேசி பயன்படுத்தப்படுவதாக உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலைக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகின்றது. இதற்கமைய பாதாள குழு உறுப்பினர்களான பொடி லெசி , தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் […]

error: Content is protected !!