இலங்கை செய்தி

இலங்கை -மாலைதீவு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் Masood Imad, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர். குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய […]

இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இத்தாலி!

  • February 5, 2026
  • 0 Comments

இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றது. வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இத்தாலி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். அத்துடன், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் […]

இலங்கை செய்தி

அநுர அரசின் இனவாதமற்ற பயணத்துக்கு வாசு பாராட்டு!

  • February 4, 2026
  • 0 Comments

“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். “ இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும். ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்ட அரசாகும். பிரபு வர்க்கத்தினர் அல்ல. சாதாரண மக்களே ஆட்சியில் உள்ளனர். எனவே, ஏற்பட்ட மாற்றத்தை சிறந்த மாற்றமாக மாற்றுவதற்கு […]

இலங்கை செய்தி

” இனவாதம் – மதவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்” – பிரதமர்

  • February 4, 2026
  • 0 Comments

“இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், மனிதநேயத்துடனும் மக்களை நேசிப்பதற்காக அவர்களை வழிப்படுத்துதல், கிராமிய வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முன்னுரிமை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமரின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி வருமாறு, ” 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு […]

இலங்கை செய்தி

” பொன்னான வாய்ப்புகளை இனியும் தவறவிடக்கூடாது” – ஜனாதிபதி

  • February 4, 2026
  • 0 Comments

“கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். அவர சுதந்திர தனி வாழ்த்துச் செய்தி வருமாறு, ” பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, […]

செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்

  • February 3, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகமாக new Auditor General திருமதி சமுதிகா ஜயரத்னவை Samudika Jayaratne நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் மூத்த துணைக் கணக்காய்வாளராக இவர் பதவி வகித்தார். அரசியலமைப்பு பேரவை The Constitutional Council அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (03) கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு ஜனாதிபதியால் இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நான்கு பெயர்களை அரசியலமைப்பு […]

இலங்கை விளையாட்டு

T20 உலகக்கிண்ண தொடர்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

  • February 3, 2026
  • 0 Comments

“இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ண தொடரானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் கைகொடுத்துள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்றது. இதன்போது T20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ T20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பெப்ரவரி 7 முதல் மார்ச் […]

விளையாட்டு

ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக்கிண்ண தொடருக்குள் காலடி வைக்குமா இலங்கை?

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதி T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், T20 தொடரையும் ஏற்கனவே வென்று தொடரை தன் வசமாக்கியுள்ளது. இதனால், […]

இந்தியா

இந்திய பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

இந்தியாவின் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரவு- செலவுத் திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பாதீட்டு தரவுகளின் அடிப்படையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் (இந்திய ரூபா) முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கைக்கான உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்காக 3 பில்லியன் […]

அரசியல் இலங்கை செய்தி

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

  • February 2, 2026
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் Sri Lankan Parliament நாளை (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Speaker Jagath Wickramaratne தலைமையில் கூடவுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், அபிவிருத்தி அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாத–பிரதிவாதங்கள் இடம்பெறும் […]

error: Content is protected !!