உலகம் செய்தி

போரால் 9 விமானங்களை இழந்துள்ள அமெரிக்கா!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் நடவடிக்கை ஆரம்பமானது முதல் போர் விமானம் உட்பட 9 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானம், எரிபொருள் நிரப்பு விமானம், போக்குவரத்து விமானம் என்பனவே இதுவரை இழக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி குறித்த போர் ஆரம்பமானது. இன்று 40 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான போர் நடவடிக்கையின்போது வான்வழி தாக்குதலே பெருமளவில் நடத்தப்பட்டுவருகின்றன. ஈரானின் தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தவறான இலக்குத் தாக்குதல்கள் காரணமாகவே போர் விமானங்கள் […]

இலங்கை செய்தி

ஈரான்மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்: இலங்கையில் போராட்டம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ஆக்கிரமிப்பு போரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (07) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டம், பேராதனை, கலஹா சந்தியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சோசலிச அனைத்துலகவாத போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. பேராதனை, ஹிந்தகலவில் அமைந்துள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், இது தொடர்பில் இன்று மாலை பகிரங்க கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

உக்கிர தாக்குதல்: ஈரானில் பலர் பலி!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானின் பர்திஸ் மற்றும் ஷாரியார் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்கு அடியிலிருந்து இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேற்குப் பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகவும் உக்கிரமான முறையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றன. ராணுவ இலக்குகளுக்கு அப்பால் பொது கட்டமைப்பு உள்ளிட்டவைமீதும் […]

இலங்கை செய்தி

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

“அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும பயனாளிகளுக்கு இம்மாதம் 25,000 ரூபா கிடைக்கப்பெறும். மாதாந்தம் 10,000 ரூபா பெறும் பயனானிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும். மாதாந்தம் 5,000 ரூபாவை அஸ்வெசும கொடுப்பனவாக பெறுபவர்களுக்கு 7,500 ரூபா வழங்கப்படும். இம்மாதம் மாத்திரமே இந்த கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படும். இதற்காக […]

உலகம் கல்வி

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைமீது இன்று (07) விவாதம் நடைபெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியான எரிபொருள் விநியோகத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. நட்பு நாடுகளுக்கு மட்டுமே அதில் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கிவருகின்றது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டின் கோரிக்கைக்கமையவே மேற்படி பிரேரணை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமையே விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன நடைபெற இருந்தது. எனினும், […]

உலகம் செய்தி

இன்று ரயில் பயணம் வேண்டாம்: ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான் மக்கள், இன்று இரவு 9 மணி வரை ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல ஈரான் அனுமதிக்கத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் சாதகமான பிரதிபளிப்பை வெளியிடாவிட்டால் இதற்கான காலக்கெடு இன்று முடிந்த பின்னர், அமெரிக்கா உக்கிர தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் ஈரான், தெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகள் […]

இந்தியா

மகளின் விவாகரத்தை கொண்டாடிய தந்தை!

  • April 7, 2026
  • 0 Comments

தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்கள் முழங்க இனிப்பு வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கொண்டாடிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியக் குடும்பங்களில் விவாகரத்து என்பது இன்றும் ஒரு சமூகக் களங்கமாக பார்க்கப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதியான ஞானேந்திர சர்மா , உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். அவரின் மகளின் பெயர் பிரணிதா. இவருக்கும் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றும் கவுரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிசக்தி பாதுகாப்பு ஏற்பாடு: சிங்கப்பூர் பறக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்!

  • April 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese இரு நாள் பயணமாக நாளை மறுதினம் (9) சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றார். சிங்கப்பூர் பிரதமர் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான மூலோபாய உறவை மேம்படுத்துவது குறித்தும் தடையற்ற எரிபொருள் வர்த்தகத்தை உறுதி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு […]

உலகம் செய்தி

ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி operation epic fury ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ராணுவ நடவடிக்கையில் ஈரானுக்குரிய 155-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் சிதைக்கப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது அதிநவீன F-35 போர் விமானங்கள், B-52 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் […]

உலகம் செய்தி

ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ட்ரம்ப்: நியூசிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானின் பொதுமக்கள் கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவது தேவையற்றது மற்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon சுட்டிக்காட்டியுள்ளார். பாலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தற்போதைய சூழலில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, மோதல்கள் பரவாமல் தடுப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை மீள திறப்பு, உடன்பாட்டுக்கு வருதல் உள்ளிட்ட விடயங்களுக்கு ஈரான் […]

error: Content is protected !!