பருத்தித்துறையில் மூன்று மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை முன்னெடுப்பு!
யாழ். பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற படகு ஒன்று, இன்று அதிகாலை வரையில் கரை திரும்பாத நிலையில் அதில் பயணித்த மூவரும் காணாமல்போயுள்ளனர் என்று உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்கப் புறப்பட்ட படகு, இன்று திங்கட்கிழமை அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டும். எனினும், நீண்ட நேரமாகியும் படகு கரை திரும்பாததையடுத்து, உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல்போன படகில் மூன்று மீனவர்கள் பயணித்தனர் […]













