இலங்கை செய்தி

இலங்கையில் மின்சாரக் கட்டணமும் அதிகரிப்பு!

  • March 30, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டனர். இதற்கமைய மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண உயர்வு கோரப்பட்டிருந்தது. எனினும், பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம், ஏற்றுமதி வணிகம் உடப்ட […]

இந்தியா தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்!

  • March 30, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் அரசியல் களம் அனல் கக்குகின்றது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்று (30) ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் M.K. Stalin வேட்புமனுத் தாக்கல் செய்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் தவெக TVK தலைவர் விஜய்யும் Vijay இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் […]

இலங்கை செய்தி

“மொட்டு கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி”

  • March 30, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தளவு நிறைவேற்றிவருகின்றது. இலங்கையில் இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுவருகின்றன. அடக்குமுறை கையாளப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். […]

இலங்கை செய்தி

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்!

  • March 30, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியின் முதற்கட்ட அகழ்வுப் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை ஊடாகக் காத்தான்குடிக்கு வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான […]

உலகம் செய்தி

ஈரான் போரில் அமெரிக்காவின் இறுதி இலக்கு என்ன?

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரில் அமெரிக்காவின் இறுதி இலக்குகள் எவை என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி Anthony Albanese விளக்கம் கோரியுள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதிலும் அதன் ராணுவ வலிமையைக் குறைப்பதிலும் வெற்றி கிட்டியுள்ளதால் போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகப் பொருளாதார நலன் கருதி பதற்றத்தைத் தணிக்க விரும்புவதால், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஈரானின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் […]

இந்தியா செய்தி

போர் விமானங்களில் நவீன ஏவுகணைகளை இணைக்கிறது இந்தியா!

  • March 30, 2026
  • 0 Comments

இந்திய விமானப்படையின் மிக்-29 போர் விமானங்களில் MiG-29 fighter நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன. இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் 15 கி.மீ தூரம் மட்டும் சென்று தாக்கும். விமானப் படையில் உள்ள தேஜஸ் மற்றும் ஜாகுவார் […]

செய்தி

தொழில் அதிபர்களை சந்திக்கிறார் பிரதமர்Keir Starmer!

  • March 30, 2026
  • 0 Comments

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் Keir Starmer , முக்கிய தொழில் அதிபர்களை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஈரான் போர்ச் சூழலால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியைச் சமாளிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து மூத்த […]

செய்தி

ஈரானில் ஆட்சி மாற்றம்: ட்ரம்ப் கூறுவது என்ன?

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரினால் அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதால், தற்போது புதியதொரு குழுவுடன் அமெரிக்கா பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்கள் மிகவும் யதார்த்தமாகச் செயல்படுவதால், அவர்களுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கை ஏற்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதையும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

இலங்கை செய்தி

‘அரசியல் தீர்வு திட்டம்’: தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க இணக்கம்!

  • March 30, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் […]

உலகம் செய்தி

கார்க் தீவில் களமிறங்கும் அமெரிக்க படை?

  • March 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆலோசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகள் அங்கு களமிறக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகின்றது. ஈரானின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார். […]

error: Content is protected !!