இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? 31 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?

  • March 16, 2026
  • 0 Comments

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் ‘பிரதான சூத்திரதாரி’ யார் என்பது குறித்த தகவலை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெளிப்படுத்தவுள்ளேன்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில Udaya Gammanpila அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி […]

உலகம் செய்தி

“ ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை நேட்டோ போர் அல்ல” – பிரிட்டன் அமைச்சர் சுட்டிக்காட்டு

  • March 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை ‘நேட்டோ போர்’ Nato war கிடையாது என்று பிரிட்டன் அமைச்சர் Pat McFadden சுட்டிக்காட்டினார். நேட்டோ Nato அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று தாக்கப்பட்டால் அதற்கு எதிராக அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என 5 ஆம் சரத்தில் (Article 5) குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மேற்படி கொள்கை, இது போன்ற தன்னிச்சையான போர்களுக்குப் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். கூட்டணி நாடுகளைக் […]

உலகம் செய்தி

பிரிட்டன் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்: முன்னாள் பாதுகாப்பு பிரதானி பரிந்துரை

  • March 16, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் தனது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் , Gen Nick Carter தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் இத்தகைய இராணுவ நடவடிக்கை பிரிட்டனின் தேசிய நலனுக்கு மிகவும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய கடற்படையின் பலத்தை விட புரட்சிகர காவல்படையின் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற நவீன […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்தியபோதுகூட பொருளாதாரம் முடங்க இடமளிக்கவில்லை”

  • March 16, 2026
  • 0 Comments

“நாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றின்போது ஜே.வி.பியினர் பொறுப்பற்ற விதத்திலேயே செயல்பட்டனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், தாம் தற்போது எதிரணியில் இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam கூறினார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டவேளை அதனை வைத்து ஜே.வி.பியினர் அரசியல் செய்தனர். […]

இந்தியா

இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்குவதன் பின்புலம் என்ன?

  • March 16, 2026
  • 0 Comments

  ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பயணிப்பதற்கு நட்பின் அடிப்படையிலேயே ஈரான் அனுமதி வழங்கியது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar தெரிவித்தார். இது தொடர்பில் பிரதிபலனாக ஈரான்எதையும் பெறவில்லை எனவும் அவர் கூறினார் ‘‘ உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ்நீரிணை வழியாகவே நடைபெறுகின்றது. எனவே, இந்த பாதையை மீண்டும் திறக்கப்படுவதற்காக ஈரானுடன் இந்தியா பேச்சுசு நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்பை துண்டித்துக் கொள்வதைவிட, அவர்களுடன் பேசுவதும், புரிந்து […]

உலகம் செய்தி

Meningitis குறித்து எச்சரிக்கை: Kent பல்கலை மாணவன் உட்பட இருவர் பலி!

  • March 16, 2026
  • 0 Comments

கென்ட் Kent பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். குறித்த நோய்த்தொற்று கேன்டர்பரி பகுதியில் பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய் பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இணைந்து சுமார் 30 ஆயிரம் பேருக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையை […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு!

  • March 16, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பல துறைகளும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு நாளாந்த தேவைக்காக கிடைக்கப்பெறும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பதற்றத்தில் மக்கள் எரிபொருளை அதிகளவு சேகரிக்க முற்படுவதால் பல நகரங்களில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முன்கூட்டியே முடிந்துள்ளன. கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிகளும் போக்குவரத்துகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு தனது அவசரக்கால கையிருப்பைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. நிலைமையைச் […]

அரசியல் இலங்கை செய்தி

‘தமிழர் பிரச்சினை’ – மனோ, அநுர நேரடி சந்திப்பு!

  • March 16, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் Mano Ganesan ஆகியோருக்கு இடையில் இன்று (17) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. “ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ கணேசன், நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக கூறி இருந்தார். இதையடுத்தே இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் […]

உலகம் செய்தி

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல்: சீனாவுக்கும் எச்சரிக்கை!

  • March 16, 2026
  • 0 Comments

“ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நேட்டோ Nato உறுப்பு நாடுகள் ஒத்துழைக்கத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நிலைமையைத் தீர்ப்பதில் சீனா ஒரு பங்கை வகிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் சீன ஜனாதிபதியுடன் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஈரான் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் முடிவை மாற்றியதன் பின்னணி என்ன?

  • March 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஐந்தாவது வீராங்கனை தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். ஈரான் அணியின் கேப்டன் சஹ்ரா கன்பாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தேசபக்தி உணர்வுடன் நாடு திரும்பியதாக ஈரான் ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. முன்னதாக, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மௌனம் காத்ததால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஏழு வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு கோரினர். தற்போது அவர்களில் இருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில், […]

error: Content is protected !!