உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் மரணப் பொறி: லெபனானில் உக்கிர தாக்குதல்!

  • March 13, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் தலைநகரம் Beirut மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போர் நடவடிக்கையால் லெபனானில் சுமார் எட்டு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் […]

இலங்கை செய்தி

‘தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு’: வழக்கு ஒத்திவைப்பு!

  • March 13, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழ்க்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து […]

உலகம் செய்தி

ஈரான் தலைவர்களை அழிப்பது மிகப்பெரிய கௌரவம்: ட்ரம்ப்!

  • March 13, 2026
  • 0 Comments

“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump சூளுரைத்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்திவருகின்றன. பதிலுக்கு இஸ்ரேல்மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தலங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்திவருகின்றது. போரை முடிவுக்குக் கொண்டு வர இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இந்நிலையில், […]

இந்தியா

இந்தியாவில் பூமிக்கடியில் இரகசிய எரிபொருள் குகைகள்: பின்னணி என்ன?

  • March 13, 2026
  • 0 Comments

போர்ச்சூழலால் உலகளவில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பூமிக்கடியில் 3 இரசிகய குகைகளில் இந்தியா கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு கச்சா எண்ணெயை இவ்வாறு சேமித்து வைத்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல […]

பொழுதுபோக்கு

விஜய்க்காக ஆதரவு குரல் எழுப்பும் பிரியங்கா சோப்ரா!

  • March 13, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் Vijay மற்றும் நடிகை திரிஷா Trisha தொடர்பில் பல கோணங்களில் கதை அடிபடும் நிலையில், விஜய்யை புகழ்ந்து மற்றுமொரு நடிகை கருத்து வெளியிட்டுள்ளார். தனது முதல் படத்தின் நாயகன் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே நடிகை பிரியங்கா சோப்ரா, Priyanka Chopra விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா […]

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’: ஜனாதிபதி தலைமையில் கூடியது பொருளாதார கண்காணிப்புக் குழு!

  • March 13, 2026
  • 0 Comments

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் , நேற்று (12) பிற்பகல் கூடியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய […]

இந்தியா தமிழ்நாடு

கட்சி தாவும் படலம் தொடர்கிறது: அ.தி.மு.கவில் இணைந்தார் காளியம்மாள்!

  • March 13, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கட்சி தாவும் படலமும் தொடர்கின்றது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் Kaliammal, எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami முன்னிலையில் இன்று (13) அதிமுகவில் AIADMK இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் […]

இலங்கை செய்தி

“கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மைக்கு ஆபத்து”?

  • March 13, 2026
  • 0 Comments

” வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை மணிக்கு நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் […]

இலங்கை செய்தி

17 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!

  • March 13, 2026
  • 0 Comments

மார்ச் மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன. சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகள்மீதான விவாதங்களும் இடம்பெறவுள்ளன. மத்திய கிழக்கு போர்ச்சூழல் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் பற்றியும் ஆளும் மற்றும் எதிரணிக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறக்கூடும்.

விளையாட்டு

பழி தீர்க்குமா பாகிஸ்தான்?

  • March 13, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (13) நடைபெறுகின்றது. இலங்கை நேரப்படி குறித்த போட்டி இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஆரம்பமாகும். பங்களாதேஷ் சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மிர்புரில் நடந்த முதல் ஆட்டத்தில் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் […]

error: Content is protected !!