உலகம் செய்தி

தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு மேலும் பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தாக்குதலை […]

இலங்கை செய்தி

விவசாயத்துறைக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்!

  • April 9, 2026
  • 0 Comments

“உலகில் எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாதிருப்பதற்கு எமது விவசாயிகளின் உன்னதமான அர்ப்பணிப்பே காரணமாகும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது. அதன்பின்னர் மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரத்தம், […]

உலகம் செய்தி

லெபனானில் 24 மணிநேரத்துக்குள் இத்தனை பேர் பலியா?

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. 1000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலால் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்றும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருகின்றது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உலகம் செய்தி

‘போர் நிறுத்தத்துக்குள் புகுந்த சீனா’ – நீடித்த அமைதி வேண்டுமென வலியுறுத்து!

  • April 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் இந்த வாய்ப்பைப் சரியாக பயன்படுத்த வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் மோதல்கள் நீங்கி இயல்பு நிலை திரும்புவதை சீனா எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய போரை முற்றிலுமாக நிறுத்தி, நீடித்த அமைதியை […]

இலங்கை செய்தி

அன்னை பூபதி நினைவு ஊர்தி நல்லூரில் இருந்து ஆரம்பம்!

  • April 9, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி பயணம் இன்று (9) நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்தி வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 1932 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03ஆம் […]

இலங்கை செய்தி

கியூபாவுக்காக வவுனியாவில் கையெழுத்து வேட்டை!

  • April 9, 2026
  • 0 Comments

கியூபாமீது அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கையில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக வவுனியா, இலுப்பையடியில் இன்று (09) பொது மக்களிடம் கையொப்பம் திரட்டப்பட்டது. கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கமும், சமூக வெகுஜன அமைப்பும் இணைந்தே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றன. இதன்போது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

உலகம் செய்தி

தெஹ்ரானில் தூதரகத்தை மீள திறக்கிறது ஸ்பெயின்!

  • April 9, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தமது நாட்டு தூதரகத்தை மீண்டும் திறக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் Jose Manuel Alvarez ,தமது நாட்டு தூதுவரை ஈரான் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அமைதியை நிலைநாட்ட அனைத்து முனைகளிலும் செயல்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் ஈரானிய தலைநகரிலிருந்தே அமைதி பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்கேற்க ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு தனது வான்பரப்பை பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் அனுமதி […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு: பாகிஸ்தான் விரைகிறது ஈரான் தூதுக்குழு!

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது என தெரியவருகினறது. ஈரான் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தொடர்பான விவரம் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்காவின் தூதுக்குழுவுக்கு அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குவார் எனக் கூறப்படுகின்றது. ஈரானால் முன்வைக்கப்பட்ட பத்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் கலந்துரையாடல் அமையும் என பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்நிறுத்த விதி மீறல்கள் இந்த இராஜதந்திர முயற்சியைச் சிதைக்கக்கூடும் என ஈரான் தரப்பில் சந்தேகம் […]

உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம்: பிரிட்டன் வலியுறுத்து!

  • April 9, 2026
  • 0 Comments

உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணையை மீள திறக்குமாறு பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானையும் இணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க இந்த நடவடிக்கை அவசியமாகக் கருதப்படுகிறது. அதேவேளை, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், சவூதி அரேபிய இளவரசரைச் சந்தித்து மத்திய கிழக்கில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது […]

உலகம் செய்தி

ஒப்பந்தத்தை மீறினால் ஈரான்மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாகப் பின்பற்றும் வரை அமெரிக்கப் படைகள் அப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். மேற்படி ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ராணுவம் தற்போத தங்களைத் தயார்படுத்தி வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் […]

error: Content is protected !!