வடக்கில் பிரதான இரு செயல்திட்டங்கள்: உலக வங்கி அனுமதி!
உலக வங்கியின் நிதியுதவியுடன் ‘ரிவைவ்’ (REVIVE) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை இன்று (03) சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த முதற்கட்டத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இறங்குதுறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இரு இடங்களையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே உலக வங்கியால் […]













