இலங்கை செய்தி

செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90 ஆயிரம் லீற்றர் நீர் வெளியேற்றம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் Chemmani mass grave தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தடவைகள் கடும் மழை […]

விளையாட்டு

மண்கவ்வியது ஓமான்: வெற்றிக் கனியை ருசித்தது சிம்பாப்வே!

  • February 9, 2026
  • 0 Comments

சிம்பாப்வே Zimbabwe மற்றும் ஓமான் Oman அணிகளுக்கிடையிலான T20 ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழச்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஓமான அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. ஓமான் அணியில் மூவர் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோர் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. பின்னர் வெற்றி […]

இலங்கை செய்தி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்று (09) இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு […]

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: சேதமடைந்த படைத்தளங்களை புனரமைக்கிறது பாகிஸ்தான்!

  • February 9, 2026
  • 0 Comments

இந்தியா India முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூர் operation sindoor நடவடிக்கையின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை புனரமைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் Pakistan ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு Pahalgam terrorist attack பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருந்தது. மேற்படி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் […]

error: Content is protected !!