இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்ட உதவி!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப் போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். கடந்த சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை மூன்று மாணவர்களிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது மாணவர்களுக்கான […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணிநேர விசாரணை!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த மாணவர்களிடமே இந்த நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு: பின்னணி என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது, வடக்கில் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியா என இலங்கை தமிழரசுக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் Gnanamuthu Srinesan இவ்வாறு வினா தொடுத்தார். “யாழ்.பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது வடக்கு மாகாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். மாணவர்களின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைப்பாடுகள் […]

உலகம் செய்தி

போர் வியூகத்தை மாற்றுகிறார் ட்ரம்ப்: மத்திய கிழக்கில் நடக்கப்போவது என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இதற்கமைய ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் ஈரானின் கர்க் தீவு எண்ணெய் மையத்தை கைப்பற்றல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான கூடுதல் படையினரை களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஆலோசித்துவருகின்றார் எனக் கூறப்படுகின்றது. ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை கைப்பற்றுவதற்குரிய திட்டமும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரை […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு!

  • March 19, 2026
  • 0 Comments

அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய மகஜர், இன்று வியாழக்கிழமை கொழும்பு -07 இல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் (United Nations Compound) கையளிக்கப்பட்டுள்ளது. குரல் அற்றோரின் குரல் (Voice of the Voiceless) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், யாழ்ப்பாணம் நல்லூர் […]

இலங்கை செய்தி

அநுரவை சந்தித்தார் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி: மத்திய கிழக்கு போர் குறித்தும் பேச்சு!

  • March 19, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

சிங்கப்பூர் வைத்தியசாலையில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

  • March 19, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு Ranil Wickremesinghe அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று ஐ.தே.க. முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க Ravi Karunanayake தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம்,” எனவும் அவர் கூறினார். சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இலங்கை செய்தி

அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் இலங்கை விஜயம்!

  • March 19, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் Sergio Gor, இன்று (19) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உயர்மட்ட சந்திப்புகளுக்காக அவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருக்கும் காலப்பகுதிக்குள் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசாங்கத்தின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார். […]

இலங்கை செய்தி

‘பொலிஸாரின் விசாரணை வேட்டை’யை எதிர்த்து யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

  • March 19, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்று (19) இப் போராட்டம் இடம்பெறுகின்றது. “ மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தோம். பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து , மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவர்களாயின் தொடர் போராட்டங்களை […]

பொழுதுபோக்கு

மீண்டும் ‘பேய்’ படம்!

  • March 19, 2026
  • 0 Comments

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, Sundar C மீண்டும் பேய்க் கதையொன்றில் நடிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இப்படத்துக்கான படப்பிடிப்பு எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை மீண்டும் இணையும் படத்தை மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கின்றனர். ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.ராம் பிரசாத் குறித்த ஒளிப்பதிவு செய்கிறார். திகில் […]

error: Content is protected !!