உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகள் நீக்கம்: ட்ரம்பின் 15 அம்ச திட்டம் கூறுவது என்ன?

  • March 25, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதுடன், ஆயுதமேந்திய குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானின் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்கவும் மற்றும் மின்சாரத் தேவைக்காக சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஹார்முஸ் […]

உலகம் செய்தி

ஈரான் மறுப்பு: பேச்சு நடக்கிறது என ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! 15 அசம் திட்டம் முன்வைப்பு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தரப்பு மேற்படி தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள போதிலும், ஒரு பெரிய ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தாங்கள் சரியான நபர்களுடன் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் கடல்வழிப் பாதைகளைத் திறத்தல் போன்ற பதினைந்து அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி […]

இந்தியா செய்தி

ஈரான் மக்களுக்காக மாத சம்பளத்தை வழங்கிய சுயேச்சை எம்.பி.!

  • March 25, 2026
  • 0 Comments

ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பளத்தை ஈரான் மக்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா பகுதி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்தான் அப்துல் ரஷீத் ஷேக். பொறியாளரான இவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ளார். காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவினார் என இவர்மீது குற்றச்சாட்டு உள்ளது. சிறையிலிருந்தபடி மக்களவை தேர்தலில் வென்ற ரஷீத், நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகின்றார். இதற்கமைய நாடாளுமன்ற மக்களவையில் […]

உலகம் கல்வி

“ஹார்முஸ் நீரிணையில் இருந்து தப்பிய முதல் கப்பல்”

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் வெடித்தபோது ஹார்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட ஜப்பானிய சரக்குக் கப்பல், அங்கிருந்து துணிச்சலாகத் தப்பித்து தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. துபாயில் சரக்குகளை இறக்கிவிட்டுத் திரும்பிய அயர்ன் மெய்டன் என்ற அந்த கப்பல், ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது இருப்பிட சமிக்ஞைகளை அணைத்துவிட்டு நள்ளிரவில் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டது. இந்தப் போர்ச் சூழலில் இருந்து பத்திரமாக வெளியேறிய முதல் கப்பலாக இது கருதப்படுவதால் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு […]

உலகம் செய்தி

தோல்வியை உடன்படிக்கையாக சித்தரிக்க ட்ரம்ப் முயற்சி: ஈரான் ராணுவம் பதிலடி!

  • March 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்படுகின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தை ஈரான் ராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனது தோல்விகளை ஒரு உடன்படிக்கையாகச் சித்தரிக்க முற்படுகின்றது என ஈரானின் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பாகரி Ebrahim Zolfaghari தெரிவித்தார். ஈரானிய மக்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் அமெரிக்காவின் எண்ணத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் வரை எந்தவொரு சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதையச் சூழலில் மட்டுமல்லாது, வருங்காலத்திலும் அமெரிக்காவுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பலுக்கு இராஜதந்திர அழைப்பை விடுத்ததா இலங்கை?

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த கனிவான மற்றும் வாய்மொழி அழைப்பைத் தவிர, […]

உலகம் செய்தி

‘எரிபொருள் நெருக்கடி’- விமான சேவையை நிறுத்தியது Jetstar

  • March 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், Jetstar நிறுவனம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான பல விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. மே மாதத்தில் சுமார் 12 சதவீத விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளது. பொருளாதாரச் சுமை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வியட்நாம் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களது உள்நாட்டுச் சேவைகளைக் குறைத்துள்ளன. உலகளாவிய […]

உலகம் செய்தி

போரில் வென்றுவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார். ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதை மறுத்துள்ள ஈரான், தங்களுக்கு அணு ஆயுதக் கொள்கை ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அதேபோல போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா உலகம் செய்தி

ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி பேச்சு: அமைதி முயற்சி குறித்தும் ஆராய்வு!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் இந்திய பிரதமர் Narendra Modi ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி ஊடாகவே இன்று (24) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை பாதுகாப்பாகவும் தடையின்றியும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்துவம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பிராந்திய அமைதியை நிலைநாட்ட இரு […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி!

  • March 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) இச்சந்திப்பு நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் […]

error: Content is protected !!