இலங்கையில் Work From Home முறைமையை மேம்படுத்த திட்டம்!
அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் Dr. Harini Amarasooriya தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுநிர்வாகம் , சுகாதாரம், கல்வி மற்றும் நீதி ஆகிய அமைச்சுகளின் […]













