உலகம் செய்தி

வான்வழி தாக்குதலில் ஈரான் உளவுப்பிரிவு தலைவர் பலி!

  • April 6, 2026
  • 0 Comments

இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. Seyyed Majid Khademi என்ற அந்த உயர் அதிகாரி, IRGC இன் முக்கிய உளவுப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கி வந்தவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், சில ஈரான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.  

உலகம் செய்தி

ஈரான் பல்கலைக்கழகம்மீது தாக்குதல்: அமெரிக்க எம்.பி. கண்டனம்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மீது Sharif University நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Yassamin Ansari வன்மையாகக் கண்டித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கும் மேற்படி கல்வி நிறுவனம் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பில் தனது சமூக ஊடகம் வாயிலாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலிலேயே பல்கலைக்கழகம் சேதமடைந்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதி சேதமடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. […]

செய்தி பொழுதுபோக்கு

இலங்கை பூர்வீகம்: சின்னத்திரை நடிகை தற்கொலை!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கயல்” சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் பிப்பின் சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சுபாஷிணி தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

மே மாதம்வரை எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

  • April 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியா தனது எரிபொருள் இருப்பை எதிர்வரும் மே மாதம்வரை உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் Chris Bowen மேற்படி தகவலை இன்று (06) வெளியிட்டுள்ளார். மே மாதம் இறுதி வரை தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான சட்டபூர்வ ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவும் இக்கட்டான காலக்கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி விநியோகத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிர கவனம் […]

இலங்கை செய்தி

QR முறை விரைவில் நீக்கம்: புதன் விடுமுறையும் மாறும்!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுவருகின்றது. குறிப்பாக பற்றாக்குறையின் உச்சக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவில் படிப்படியாக நீக்கப்படலாம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எரிபொருள் தேவையைக் குறைப்பதற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமை, விரைவில் ஒரு […]

இந்தியா

காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை: ஆந்திராவில் கொடூரம்!

  • April 6, 2026
  • 0 Comments

குடும்ப எதிர்ப்பைமீறி காதல் திருணம் செய்துகொண்ட யுவதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த சவ்டேஸ்வரி (வயது 22) குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4 ஆம் திகதி காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை, மச்சேர்லா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர். காவல் நிலையத்தின் […]

உலகம் செய்தி

ஈரானிலுள்ள கல்வி நிறுவனங்கள் இலக்கு வைப்பு!

  • April 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலின் விளைவாக நகரின் சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், தலைநகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் உள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவங்கள் ஈரான் தலைநகரில் பெரும் […]

உலகம் செய்தி

எரிசக்தி நெருக்கடி: மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!

  • April 6, 2026
  • 0 Comments

எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுடன் எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். உள்நாட்டுத் எரிபொருள் தேவையில் சுமார் 70 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெறுவதால், விநியோகத் தடையைத் தவிர்க்க தென்கொரியா ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. ஆசியாவின் முக்கிய பொருளாதார சக்தியாகத் […]

உலகம் செய்தி

உடனடி போர் நிறுத்தம்: ரஷ்யா, சீனா கூட்டாக வலியுறுத்து!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசிய போர்ச்சூழல் சூழல் மற்றும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சீனா மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும், இந்தப் பிரச்சனையில் நேர்மையான மற்றும் சமநிலையான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்யவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் உடனடி போர்நிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். […]

செய்தி விளையாட்டு

ஈரானின் கோரிக்கையை ஏற்குமா FIFA?

  • April 6, 2026
  • 0 Comments

2026 கால்பந்து உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்காவில் தமது அணி பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை FIFA ஏற்றால் மட்டுமே தமது அணி உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாகக் கருதும் ஈரான், வீரர்களின் பாதுகாப்பு குறித்த உறுதியான […]

error: Content is protected !!