உலகம் செய்தி

இறங்கிவர மறுத்தால் ஈரான்மீதான தாக்குதல் தீவிரமாகும்!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் Hegseth வலியுறுத்தினார். சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது தாக்குதலின் தீவிரத்தை பலமடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த முப்பது நாட்களில் ஈரானில் 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 11,000 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி டான் கெய்ன் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்கா பெற்றுள்ள வான்வழி […]

அரசியல் இலங்கை செய்தி

சமஷ்டி திட்டத்தை ஒருபோதும் கைவிடோம்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்!

  • March 31, 2026
  • 0 Comments

” எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. […]

இலங்கை செய்தி

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது. 1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் […]

இலங்கை செய்தி

25 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 12 பேருக்கு மறியல் நீடிப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சமயம், கடற்படையினரால் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்று முதல் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு அமெரிக்கா வசமாகுமா?

  • March 31, 2026
  • 0 Comments

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் தன் வசம் வைத்துள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி டாம் ஷார்ப் Tom Sharpe தெரிவித்துள்ளார். அமெரிக்கா இப்பகுதியை இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மீட்க முயற்சிப்பது தற்போதைய நிலையில் சாத்தியமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஈரான் தானாக முன்வராத வரை, வெளிநாட்டு தலையீடுகள் அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா […]

உலகம் செய்தி

பாதுகாப்பு தகவல்களை வழங்கினால் மரண தண்டனை: ஈரான் எச்சரிக்கை!

  • March 31, 2026
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்குப் பகிரும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் ஈரான் அரசு என்று எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இயற்றப்பட்ட புதிய உளவுச் சட்டத்தின் கீழ், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களுக்குத் தூக்குத் தண்டனையும் வழங்கப்படும் என்று நீதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களின் படங்களை அனுப்புவது எதிரி நாடுகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கி உதவுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. […]

உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும்: சீனா வலியுறுத்து!

  • March 31, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Ishaq Dar சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பீஜிங்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது பிராந்திய மோதல்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஈரானில் நடைபெற்று வரும் போர் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. போரினால் ஈரானில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சேதமடைவதற்கு சீனா தனது ஆழ்ந்த வருத்தத்தைப் […]

உலகம் செய்தி

ஈரானின் ராணுவ இலக்குகள் வெற்றிகரமாக தகர்ப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் தெளிவான பதிலை வழங்கவில்லை. அத்துடன், ஈரானின் ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தங்களது நேரடி […]

இந்தியா செய்தி

“பாம்பு தீண்டி 431 பேர் பலி”!

  • March 31, 2026
  • 0 Comments

இந்தியாவில் பாம்பு தீண்டி கடந்த வருடம் மாத்திரம் 431 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் வழங்கியுள்ள பதிலில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு 183 பேர் உயிரிழந்தனர். 2024 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 370-ஆக உயர்ந்து. 2025-ல் 431 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனவும் மேற்படி பதிலில் […]

இலங்கை செய்தி

பருத்தித்துறையில் மூன்று மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை முன்னெடுப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற படகு ஒன்று, இன்று அதிகாலை வரையில் கரை திரும்பாத நிலையில் அதில் பயணித்த மூவரும் காணாமல்போயுள்ளனர் என்று உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்கப் புறப்பட்ட படகு, இன்று திங்கட்கிழமை அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டும். எனினும், நீண்ட நேரமாகியும் படகு கரை திரும்பாததையடுத்து, உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல்போன படகில் மூன்று மீனவர்கள் பயணித்தனர் […]

error: Content is protected !!