விளையாட்டு

தொடரை வெல்லுமா நியூசிலாந்து? நாளை பலப்பரீட்சை!

  • March 21, 2026
  • 0 Comments

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 4ஆவது T20 போட்டி நாளை (21) நடைபெறுகின்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றும். எனவே, அவ்வணி முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. மறுபுறத்தில் இப்போட்டியில் வென்று தொடரில் தமக்கான வெற்றிவாய்ப்பையும் தக்கவைப்பதற்கு தென்னாபிரிக்கா அணி போராடும். எனவே, போட்டியில் கடைசிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நேற்று நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகொலை: மகள், காதலன் கைது! நடந்தது என்ன?

  • March 21, 2026
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது மகளின் காதலனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட விரிவுரையாளரின் சடலம் தனங்களப்பு காற்றாலைப் பகுதியில் இருந்து இன்று (21) மீட்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் அரங்கேற்றியுள்ள இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் 19 வயது மகளும், 21 வயது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிலிருந்து, அவரும் அவரது மகளும் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டனர் […]

உலகம்

ஜப்பான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி?

  • March 21, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக ஜப்பான் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் ஈரான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஜப்பானுக்காக தற்போது நிலவும் போக்குவரத்துத் தடையைத் தற்காலிகமாக நீக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். நேரடிப் பேச்சுகள் பலனளிக்கும் என ஜப்பான் கருதினாலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவைத் தூண்டாமல் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட அந்நாட்டு அதிகாரிகள் விரும்புகின்றனர். ஈரானின் இந்த அறிவிப்பு எரிசக்தி நெருக்கடிக்கு முழுமையான தீர்வாக அமையாது […]

உலகம் செய்தி

இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!

  • March 21, 2026
  • 0 Comments

மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க – பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles – IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ரிற் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இலங்கை, ஜப்பான் இணக்கம்!

  • March 21, 2026
  • 0 Comments

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் Aruna Jayasekara , அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் Shinjirō Koizumi பேச்சு நடத்தியுள்ளார். டோக்கியோவிலுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது. இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சந்திப்பின் போது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் “Free […]

இலங்கை செய்தி

யாழில் புதிய அமைப்பாளரை களமிறங்கியது SJP!

  • March 21, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் SJP யாழ்ப்பாணம் -கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை கோப்பாய் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக சதாசிவம் திலீப்குமாரும், ஒருங்கிணைப்பாளராக கமலசிங்கம் மதனகாந்தும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமன கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்

இலங்கை செய்தி

வலி. வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு?

  • March 21, 2026
  • 0 Comments

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரலில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார். யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (20) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தையிட்டி பகுதியில் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’ – அவசர கட்சி தலைவர்கள் கூட்டம்!

  • March 21, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்நெருக்கடியை எதிர்கொள்வதற்காக தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குரித்து கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் […]

இலங்கை செய்தி

விபத்தில் தாயும், மகளும் பலி: யாழில் சோகம்!

  • March 21, 2026
  • 0 Comments

யாழ். சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகளும் பலியாகியுள்ளனர். இப்பெருந்துயர் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். […]

ஆஸ்திரேலியா விளையாட்டு

ஆஸ்திரேலிய பொலிஸார் அழுத்தம்: ஈரான் வீராங்கனை குற்றச்சாட்டு!

  • March 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய காவல்துறை தங்களை அந்நாட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினர் என்று ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனை குற்றஞ்சாட்டியுள்ளார். பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களைத் தடுக்க முயன்றதாகவும் Fatemah Shaban சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் எழுவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஐவர் ஈரான் திரும்ப முடிவெடுத்தனர் எனவும், இருவர் மட்டுமே தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையிலேயே தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளில் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டை […]

error: Content is protected !!