உலகம் செய்தி

இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து துருக்கியில் பயங்கரவாதத் தாக்குதல்: நடந்தது என்ன?

  • April 7, 2026
  • 0 Comments

துருக்கி Turkish இஸ்தான்புல் Istanbul நகரிலுள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அருகில் இன்று (07) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பாரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தரப்பினர், மேற்படி தாக்குதலை முறியடித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். சம்பவத்தின் போது […]

உலகம் செய்தி

“ஈரானின் இதயம்”மீது அமெரிக்கா தாக்குத

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான் கார்க் Kharg Island தீவிலுள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன என்று தெரியவருகின்றது. சர்வதேச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. மேற்படி தாக்குதலில் ஈரானின் பொருளாதார மையமான எண்ணெய் கட்டமைப்புகளைப் பாதிக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமாக விளங்கும் இத்தீவை முற்றிலுமாக அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். எனவே, தற்போதைய சூழலில், குறித்த தீவை கைப்பற்றுவதற்காக அமெரிக்கா தனது படையினரை அங்கு அனுப்பக்கூடும் […]

இலங்கை செய்தி

பெலருஸ், ரஷ்ய பயணத்தை உறுதிப்படுத்தினார் விஜித ஹேரத்!

  • April 7, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பெலருஸ் Belarus மற்றும் ரஷ்யா Russia ஆகிய நாடுகளுக்கே அவர் விஜயம் செய்கின்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இவ்விஜயம் இடம்பெறும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “முதலில் பெலருஸ் நாட்டுக்கும், அங்கிருந்து ரஷ்யாவுக்கும் செல்வதற்கு […]

இலங்கை செய்தி

இந்திய படகுகளில் இருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழில் ஏலம்!

  • April 7, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன. இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல […]

இலங்கை செய்தி

‘மாவா’போதைப்பாக்கு விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு: வவுனியாவில் 6 பேர் கைது!

  • April 7, 2026
  • 0 Comments

வவுனியா, குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த ‘மாவா’ போதைப்பாக்கு விற்பனை நிலையமொன்றை வவுனியா பொலிஸார் இன்று அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையின் போது கடையின் உரிமையாளர் மற்றும் மாணவர்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தடைசெய்யப்பட்ட ‘மாவா’ பாக்கு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் […]

உலகம் செய்தி

போரால் 9 விமானங்களை இழந்துள்ள அமெரிக்கா!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் நடவடிக்கை ஆரம்பமானது முதல் போர் விமானம் உட்பட 9 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானம், எரிபொருள் நிரப்பு விமானம், போக்குவரத்து விமானம் என்பனவே இதுவரை இழக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி குறித்த போர் ஆரம்பமானது. இன்று 40 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான போர் நடவடிக்கையின்போது வான்வழி தாக்குதலே பெருமளவில் நடத்தப்பட்டுவருகின்றன. ஈரானின் தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தவறான இலக்குத் தாக்குதல்கள் காரணமாகவே போர் விமானங்கள் […]

இலங்கை செய்தி

ஈரான்மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்: இலங்கையில் போராட்டம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ஆக்கிரமிப்பு போரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (07) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டம், பேராதனை, கலஹா சந்தியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சோசலிச அனைத்துலகவாத போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. பேராதனை, ஹிந்தகலவில் அமைந்துள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், இது தொடர்பில் இன்று மாலை பகிரங்க கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

உக்கிர தாக்குதல்: ஈரானில் பலர் பலி!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரானின் பர்திஸ் மற்றும் ஷாரியார் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்கு அடியிலிருந்து இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேற்குப் பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகவும் உக்கிரமான முறையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றன. ராணுவ இலக்குகளுக்கு அப்பால் பொது கட்டமைப்பு உள்ளிட்டவைமீதும் […]

இலங்கை செய்தி

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

“அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும பயனாளிகளுக்கு இம்மாதம் 25,000 ரூபா கிடைக்கப்பெறும். மாதாந்தம் 10,000 ரூபா பெறும் பயனானிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும். மாதாந்தம் 5,000 ரூபாவை அஸ்வெசும கொடுப்பனவாக பெறுபவர்களுக்கு 7,500 ரூபா வழங்கப்படும். இம்மாதம் மாத்திரமே இந்த கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படும். இதற்காக […]

உலகம் கல்வி

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்!

  • April 7, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைமீது இன்று (07) விவாதம் நடைபெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியான எரிபொருள் விநியோகத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. நட்பு நாடுகளுக்கு மட்டுமே அதில் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கிவருகின்றது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டின் கோரிக்கைக்கமையவே மேற்படி பிரேரணை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமையே விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன நடைபெற இருந்தது. எனினும், […]

error: Content is protected !!