இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: புத்தகம் எழுதி உண்மையை மூடிமறைக்க முடியாது!

  • April 8, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புத்தகங்களை எழுதினாலும் உண்மைகளை மூடிமறைக்க முடியாது. மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக நடைபெற்றுவரும் சமயங்களில் எல்லாம் கம்மன்பில கலக்கமடைகின்றார். எனவே, பிரதான சூத்திரதாரி எங்கே இருக்கின்றார் என்பது குறித்தும், இதன் பின்புலம் என்னவென்பது தொடர்பிலும் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த விதிமுறைகளை பின்பற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் Antonio Guterres வரவேற்றுள்ளார். பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் போர் நிறுத்தம் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு போர்நிறுத்த விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க ஐநா சபையின் சிறப்புத் தூதுவர் ஜீன் அர்னால்ட் தற்போது […]

விளையாட்டு

முப்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்!

  • April 8, 2026
  • 0 Comments

மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணி வெற்றிபெற்றுள்ளது. IPL – 2026 தொடரின் 13 ஆவது லீக் ஆட்டம் நேற்றிர நடைபெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதால், ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கினர். இதற்கமைய […]

செய்தி

‘தற்காலிக போர் நிறுத்தம்’ கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தை எழுச்சி!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், போர்நிறுத்தச் செய்தி வெளியானவுடன் சந்தைகள் சாதகமாக வினைபுரிந்ததால், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகள் கணிசமான வளர்ச்சியை எட்டின. எனினும், இந்த அமைதி உடன்படிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் இன்னும் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எண்ணெய் விலைகள் கடந்த பெப்ரவரி மாத அளவை விட […]

உலகம் செய்தி

இருவார கால போர் நிறுத்தம்: பல நாடுகள் வரவேற்பு! ஈரான் மக்கள் கொண்டாட்டம்!!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா, எகிப்து, ஈராக் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவிய பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கவும் அனைத்துத் தரப்பினரையும் அவர் வலியுறுத்தியுள்ளார். “பிராந்தியத்தில் […]

உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரானுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளார். இந்த அமைதி உடன்படிக்கையானது லெபனான் மற்றும் பிற பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளும் காட்டிய முதிர்ச்சியான அணுகுமுறையைப் பாராட்டியுள்ள அவர், இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டுத் தூதுக்குழுக்களையும் இஸ்லாமாபாத்திற்கு அழைத்துள்ளார். வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிநடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு, இப்பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகம் செய்தி

அமெரிக்க படைகள் வெளியேற்றம் உட்பட 10 அம்ச திட்டத்தை முன்வைத்தது ஈரான்!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 10 அம்சத் திட்டத்தை தனது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் ஈரான் முன்வைத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 1o ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு தரப்பு நேரடி பேச்சுவார்த்த இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுமையாக வெளியேற்ற ஈரான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் ஈரான் நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அனைத்து […]

உலகம் கல்வி

இரு வாரகால போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் இணக்கம்!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை இரு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த பின்னணியிலேயே அவர் திடீரென தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளார். தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஈரான் தரப்பிலும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சியின் பிரகாரமே இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன், இருவாரகால போர் […]

இலங்கை செய்தி

2025 இல் வடக்கில் 1000 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் (07) நாடாளுமன்றத்தில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து துருக்கியில் பயங்கரவாதத் தாக்குதல்: நடந்தது என்ன?

  • April 7, 2026
  • 0 Comments

துருக்கி Turkish இஸ்தான்புல் Istanbul நகரிலுள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அருகில் இன்று (07) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பாரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தரப்பினர், மேற்படி தாக்குதலை முறியடித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். சம்பவத்தின் போது […]

error: Content is protected !!