தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (06) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக […]













