ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்துள்ள வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.
அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், 1977 அவசரகால அதிகாரச் சட்டம் வரிகளுக்கான அதிகாரத்தை வழங்கவில்லை என்று வழக்குறைஞர்கள் வாதிட்டுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையை செல்லுபடியற்றதாக்கியுள்ளது.
இருப்பினும் அதிக வரம்புகளுடன், மாற்று சட்ட கட்டமைப்பின் கீழ் இறக்குமதி வரிகளை விதிக்கும் திறனை ட்ரம்ப் நிர்வாகம் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.





